×

வேலாயுதம்பாளையம் அருகே சீனிவாச பெருமாள் கோயிலில் ஏகாதசி சிறப்பு வழிபாடு

 

வேலாயுதம்பாளையம், மே 25: கரூர் மாவட்டம் நொய்யல் அருகே கோம்புப்பாளையம் தேவி பூதேவி சமேத சீனிவாச பெருமாள் கோயிலில் வைகாசி மாத ஏகாதசியை முன்னிட்டு சீதேவி பூதேவி சமேத சீனிவாச பெருமாளுக்கு பால் ,தயிர், பன்னீர், இளநீர் ,சந்தனம் ,மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது .அதனைத்தொடர்ந்து துளசி இலை மற்றும் மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதில் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சீனிவாச பெருமாள் மற்றும் பரிவார தெய்வங்களை தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. அதேபோல் குட்டக்கடை -புன்னம் செல்லும் சாலையில் உள்ள அனுமந்தராய பெருமாள் கோயிலில் ஏகாதசியை முன்னிட்டு அனுமந்தராய பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. அதேபோல் நொய்யல் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பெருமாள் கோயில்களில் ஏகாதசியை முன்னிட்டு பெருமாள் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

 

The post வேலாயுதம்பாளையம் அருகே சீனிவாச பெருமாள் கோயிலில் ஏகாதசி சிறப்பு வழிபாடு appeared first on Dinakaran.

Tags : Srinivasa Perumal Temple ,Velayudhampalayam ,Vaikasi month ,Devi ,Bhoodevi ,Sametha Srinivasa Perumal Temple ,Noyyal ,Karur district ,
× RELATED மின் மோட்டார் பழுதால் கடம்பவனீஸ்வரர்...