×

வேன், கார்களால் போக்குவரத்து நெரிசல்

ராயக்கோட்டை: ராயக்கோட்டை பஸ் ஸ்டாண்டிற்கு ஓசூர், தர்மபுரியிலிருந்தும் ஏராளமான அரசு மற்றும் தனியார் பஸ்கள் வந்து செல்கின்றன. அதனால் எப்போதும் பயணிகள் கூட்டம் இருக்கும். இந்நிலையில் தனியார் பள்ளி வாகனங்கள் மற்றும் தனியார் தொழிற்சாலை பஸ்களும், கார்களும் பஸ் ஸ்டாண்டிற்குள் வந்து செல்வதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அதனால் பஸ் ஸ்டாண்டிற்குள் வந்து பயணிகளை இறக்கியும், ஏற்றியும் செல்லும் அரசு மற்றும் தனியார் பஸ்கள் செல்ல முடியாமல் ஸ்தம்பிக்கிறது. எனவே, தனியார் வாகனங்கள் மற்றும் கார்கள், பஸ் ஸ்டாண்டுக்குள் வந்து செல்வதை தடுக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post வேன், கார்களால் போக்குவரத்து நெரிசல் appeared first on Dinakaran.

Tags : Rayakottai ,Hosur ,Dharmapuri ,
× RELATED விதை பதப்படுத்தும் இயந்திர கொட்டகை