×

வேதாரண்யம் நகராட்சியில் 20 ஆயிரம் பனைவிதைகள் நட்டு இயற்கை அரண் அமைக்கும் பணி

வேதாரண்யம்: வேதாரண்யம் நகராட்சியில் இயற்கை அரண் அமைக்கும் பணிக்காக 20 ஆயிரம் பனைவிதைகள் நடும் பணி நேற்று துவங்கியது. வேதாரண்யம் நகராட்சியின் சார்பில் வேதாரண்யம் சன்னதி கடற்கரையில் புயல், வெள்ளம், மற்றும் பல்வேறு இயற்கை இடர்பாடுகள் ஏற்படும்போது இயற்கை அரணாக விளங்கும் பனைமரங்களை உருவாக்கும் முயற்ச்சியில் 20 ஆயிரம் பனைவிதைகளை நடும்பணியை துவக்கினர். பணியை நகராட்சி ஆணையர் ஹேமலாதா துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் நகர் மன்ற தலைவர் புகழேந்தி, துணை தலைவர் மங்களநாயகி, நகராட்சி பொறியாளர் முகமது இப்ராஹீம், ஓவர்சியர் குமரன் மற்றும் நகர் மன்ற உறுப்பினர்கள், மற்றும் பள்ளி மாணவ – மாணவிகள் கலந்து கொண்டனர். வேதாரண்யம் பகுதியின் சுற்றுசூழல் இயற்கை வளங்களை மேம்படுத்தும் வகையில் நகராட்சி மூலம் கடற்கரை முழுவதும் இப்பணி மேற்கொள்ளபட்டது என நகராட்சி ஆணையர் ஹேமலாதா தெரிவித்தார்….

The post வேதாரண்யம் நகராட்சியில் 20 ஆயிரம் பனைவிதைகள் நட்டு இயற்கை அரண் அமைக்கும் பணி appeared first on Dinakaran.

Tags : Vedaranyam municipality ,Vedaranyam ,Dinakaran ,
× RELATED புதிய குற்றவியல் சட்டங்களுக்கு எதிராக வழக்கறிஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்