×

மதுரையில் நிலுவையிலுள்ள மத்திய அரசு திட்டங்களை மே.5 க்குள் முடிக்க உத்தரவு : நிர்மலா சீதாராமன்

மதுரை : மத்திய அரசின் திட்டங்கள் தமிழகத்தில் சிறப்பாக செயல்படுத்தப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார், ராமநாதபுர மாவட்டத்தில் 75% தாழ்த்தப்பட்டோர் வசிக்கும் பகுதியில் கிராம் ஸ்வராஜ் அபியான் திட்டம் உள்பட 6 திட்டங்கள் செயல்பாட்டில் இருப்பதாக மதுரையில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர்  நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து மத்திய அரசின் திட்டங்கள் தமிழகத்தில் சிறப்பாக செயல்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், செயல்படுத்தப்படாத சில திட்டங்கள் மே 5-க்குள் முழுமையடையும் என்று அவர் உறுதிப்பட தெரிவித்தார்.

இதனிடையே மதுரை மீனாட்சி கோயிலில் தீவிபத்து ஏற்பட்ட பகுதியை சீரமைக்க தேவையான உதவிகளை மத்திய அரசு செய்யும் என்றும் மதுரை மாவட்டத்தில் நிலுவையிலுள்ள மத்திய அரசு திட்டங்களை மே.5 க்குள் முடிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். மேலும் காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பாக அனைத்து மாநிலங்களுடன் கலந்து பேசி விரைவில் முடிவு எடுக்கப்படும் என்று கூறிய அவர், சேலம், திருச்சி, ஓசூர் மற்றும் சென்னை உள்ளிட்ட இடங்களில் ராணுவ தளவாட உற்பத்தி மையங்கள் துவங்கப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.

Tags :
× RELATED சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்ட...