×

வீட்டுமனை பட்டா கோரி மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

விருதுநகர், மே 23: வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும் என்பது உள்ளிட் கோரிக்கைகளை வலியுறுத்தி விருதுநகரில் மாற்றுத்திறனாளிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் பாதுகாப்போர் உரிமைக்களுக்கான சங்க மாவட்ட செயலாளர் நாகராஜ் தலைமையில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. மாவட்ட கண்காணிப்புக் குழுவில் மாற்றுத்திறனாளிகள் சங்கத்தையும் இணைக்க வேண்டும், கோட்டாட்சியர் தலைமையில், கலெக்டர் தலைமையில் 2 மாதத்திற்கு ஒரு முறை குறைதீர்க்கும் கூட்டம் நடத்த வேண்டும். 100 நாள் வேலை திட்த்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை அட்டை 15 நாட்களில் வழங்க வேண்டும்.

அனைத்து குடும்பங்களுக்கும் ஏஏஒய் ரேசன் கார்டு வழங்க வேண்டும். வீட்டுமனை பட்டாவிற்கு விண்ணப்பித்து காத்திருக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு உடனடியாக பட்டா வழங்க வேண்டும். மாதம்தோறும் ரூ.1,500 மற்றும் ரூ.2 ஆயிரம் உதவித்தொகைக்கு விண்ணப்பித்து காத்திருக்கும் அனைவருக்கும் உடன் வழங்க வேண்டும். வத்திராயிருப்பு தாலுகாவை சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கும் மனுக்களை தொடர்ந்து நிராகரிக்கும் வட்டாட்சியர், ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தினர்.

The post வீட்டுமனை பட்டா கோரி மாற்றுத்திறனாளிகள் போராட்டம் appeared first on Dinakaran.

Tags : Virudhunagar ,Dinakaran ,
× RELATED சட்ட விரோதமாக பட்டாசு தயாரித்ததே...