×

வீட்டில் கஞ்சா செடி வளர்த்தவர் கைது

பூந்தமல்லி: பூந்தமல்லியில் வீட்டின் அருகே கஞ்சா செடி வளர்த்தவரை போலீசார் கைது செய்தனர். பூந்தமல்லி அடுத்த காட்டுப்பாக்கம், கோவிந்தராஜ் நகர் பகுதியைச் சேர்ந்தவர் வினோத் (34), இவரது வீட்டின் அருகே உள்ள புதரில் கஞ்சா செடி வளர்ப்பதாக பூந்தமல்லி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று முட்புதரில் வளர்ந்த கஞ்சா செடியை பறிமுதல் செய்தனர்.  போலீசார் கஞ்சா செடியை வளர்த்த வினோத்தை கைது செய்து விசாரித்தனர். அதில் வினோத்துக்கு கஞ்சா பழக்கம் இருந்ததால் போதைக்காக கஞ்சா செடியை வீட்டிலேயே வளர்த்து வந்தது தெரியவந்தது. இவர் ஏற்கனவே போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவர் வேறு எங்கெல்லாம் கஞ்சா செடியை வளர்த்து வருகிறார் என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். …

The post வீட்டில் கஞ்சா செடி வளர்த்தவர் கைது appeared first on Dinakaran.

Tags : Poontamalli ,Govindaraj Nagar ,Dinakaran ,
× RELATED பூந்தமல்லி நகராட்சி பகுதியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் பறிமுதல்