×

வீடு மீது உயர்மின் அழுத்த கம்பி அமைக்க எதிர்ப்பு: பெண் விவசாயி தொடர் உண்ணாவிரதம்

சோமனூர்: வீடு மீது உயர்மின் அழுத்த கம்பி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கோவை அருகே பெண் விவசாயி தொடர் உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகிறார். கோவை மாவட்டம் செம்மாண்டம்பாளையம் கிராமம், கோதபாளையத்தில் தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகம் அரசூர் முதல் ஈங்கூர் வரையிலான 230 கிலோவாட் உயர் மின் கோபுரம் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தில் பல இடங்களில் திட்டப் பாதையை நேராக செயல்படுத்தாமல் குறுக்கும், நெடுக்குமாக மின் கோபுரங்கள் அமைக்கப்பட்டு உள்ளது. இதனால் குடியிருப்பு பகுதியில் உள்ள ஒரு சிலர் பாதிக்கப்படுகின்றனர்.இந்நிலையில், சோமனூர் அடுத்த கோதபாளையம் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணவேணி(50). விவசாயி. இவரது வீட்டின் மேல் உயர்மின் அழுத்த கம்பிகள் செல்லும் வகையில் வீட்டின் அருகிலேயே மின் கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மின் கோபுரத்தை அமைப்பதில் முறைகேடு நடைபெற்றுள்ளது என்றும் நேராக மின்கோபுரம் அமைக்காமல் அங்கொன்றும் இங்கொன்றும் அமைக்கப்பட்டு உள்ளது. இதனால் இவற்றை சரி செய்யக் கோரி கிருஷ்ணவேணி கடந்த ஒரு வாரமாக தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். அவருக்கு ஆதரவாக நேற்று விவசாய சங்கங்களும், விவசாயிகளும், உறவினர்களும் அவருடன் போராட்டத்தை துவக்கியுள்ளனர்….

The post வீடு மீது உயர்மின் அழுத்த கம்பி அமைக்க எதிர்ப்பு: பெண் விவசாயி தொடர் உண்ணாவிரதம் appeared first on Dinakaran.

Tags : Somanur ,Coimbatore ,Dinakaran ,
× RELATED ரயில் மோதி ஒருவர் பலி