×

விஸ்வரூபம் எடுக்கும் கோடநாடு வழக்கு!: கேரளாவை சேர்ந்த வாடகை கார் ஓட்டுநர், தரகர் இடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை..!!

நீலகிரி: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக கேரளாவை சேர்ந்த வாடகை கார் உரிமையாளர் நவ்சாத் மற்றும் புரோகர் நவ்ஃபுல் ஆகியோரிடம் போலீசார் மீண்டும் விசாரணையை தொடங்கியுள்ளனர். கடந்த 2017ம் ஆண்டு ஜெயலலிதாவின் கோடநாடு எஸ்டேட்டில் நடைபெற்ற கொலை, கொள்ளை தொடர்பான வழக்கு மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இந்த வழக்கில் கூடுதல் விவரங்கள் கிடைக்கபெற்றதால் போலீசார் மேல் விசாரணையை தொடங்கியுள்ளனர். தொடர்ந்து, கொள்ளை கும்பல் பயன்படுத்திய இனோவா காரின் கேரளாவை சேர்ந்த உரிமையாளர் நவ்சாத் மற்றும் புரோகர் நவ்ஃபுல் ஆகியோரை விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பியிருந்தனர். அதன்படி ஆஜரான இருவரிடமும் தனிப்படை டி.எஸ்.பி. கிருஷ்ணமூர்த்தி தலைமையிலான குழுவினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோன்று அப்போதைய எஸ்டேட் காவலாளி கிருஷ்ண தாபா-விடமும் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர். இதற்காக அவரை நேபாளத்தில் இருந்து அழைத்து வர தனிப்படை ஒன்று விரைவில் செல்ல இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த வழக்கில் மேல் விசாரணைக்கு தடை கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்ட நிலையில், வழக்கின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பாக கோவை மண்டல ஐ.ஜி. சுதாகர், டி.ஐ.ஜி. முத்துசாமி ஆகியோர் தொடர்ந்து இரண்டாம் நாளாக உதகையில் முகாமிட்டு ஆலோசனை நடத்தி வருகின்றனர். …

The post விஸ்வரூபம் எடுக்கும் கோடநாடு வழக்கு!: கேரளாவை சேர்ந்த வாடகை கார் ஓட்டுநர், தரகர் இடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை..!! appeared first on Dinakaran.

Tags :
× RELATED பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு...