×

விவசாயிகளுக்கு ஆலோசனை கரூர் பழைய திருச்சி சாலையில் உடைந்த சென்டர் மீடியனை விரைந்து சீரமைக்கவேண்டும்

 

கரூர், ஜூன் 19: கரூர் பழைய திருச்சி சாலையில் பழுதடைந்துள்ள சென்டர் மீடியனை விரைந்து சரி செய்ய வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கரூர் மாநகராட்சிக்குட்பட்ட சின்னாண்டாங்கோயில் பிரிவு பகுதியில் இருந்து உழவர்சந்தை வரை செல்லும் சாலை பழைய திருச்சி சாலையாக உள்ளது. இந்த சாலையின் வழியாக கருர்-திருச்சி இடையே அதிகளவு வாகன போக்குவரத்து நடைபெறுவதோடு, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் வாகன போக்குவரத்து நடைபெறுகிறது.
இந்த சாலையில், குறிப்பிட்ட தூரம் வரை சென்டர் மீடியன் அமைக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது.
அவ்வாறு அமைக்கப்பட்ட சென்டர் மீடியன் குறிப்பிட்ட தூரம் வரை பழுதடைந்து மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இதனை சரி செய்ய வேண்டும் என அனைவரும் கோரிக்கை வைத்து வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கூடுதல் கவனம் செலுத்தி பழுதடைந்த சென்டர் மீடியனை சீரமைக்க வேண்டுமென கோரிக்கைவைத்துள்ளனர்.

The post விவசாயிகளுக்கு ஆலோசனை கரூர் பழைய திருச்சி சாலையில் உடைந்த சென்டர் மீடியனை விரைந்து சீரமைக்கவேண்டும் appeared first on Dinakaran.

Tags : Karur Old Trichy Road ,Karur ,Chinnandangoil ,Karur Corporation ,Uzhavarshandhai ,Old Trichy Road… ,Dinakaran ,
× RELATED மின் மோட்டார் பழுதால் கடம்பவனீஸ்வரர்...