×

விழுப்புரம் நகராட்சி 37வது வார்டில் அந்தரத்தில் தொங்கும் குடிநீர் தொட்டி விரைந்து சீரமைக்க கோரிக்கை

விழுப்புரம் : விழுப்புரம் நகராட்சி ராகவன்பேட்டையில் இடிந்து விழும்நிலையில் உள்ள மேல்நிலைநீர்த்தேக்கதொட்டியை விரைந்து சீரமைக்க கோரிக்கை வைத்துள்ளனர். விழுப்புரம் நகராட்சி 37வது வார்டில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இதனிடையே, ராகவன்பேட்டை மாரியம்மன்கோயில் தெருவில் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு மேல்நிலைநீர்தேக்கதொட்டி கட்டப்பட்டது. பானாம்பட்டு ஊராட்சியின் கீழ் இருந்தபோது இந்த குடிநீர்தொட்டி கட்டிக்கொடுக்கப்பட்டது. தற்போது நகராட்சியோடு இணைக்கப்பட்ட நிலையில், அப்பகுதிக்கு போதிய அடிப்படை வசதிகள் செய்யவில்லை என்று பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.இதனிடையே பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட மேல்நிலை குடிநீர் தொட்டி இடிந்து விழும்நிலையில் உள்ளதால் சுத்தமான குடிநீர் கிடைக்காத நிலை உள்ளது. இதனை தற்காலிகமாக சீரமைக்கவும், விரைவில் புதிய மேல்நிலைநீர்தேக்கதொட்டி கட்டித்தரக்கோரி அப்பகுதி கவுன்சிலர் இளந்திரையன், நகரமன்றத்தலைவர் சர்க்கரை தமிழ்ச்செல்வி மற்றும் ஆணையர் சுரேந்திரஷாவிடம் மனு அளித்தனர். கோரிக்கை மனு மீது விரைந்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்….

The post விழுப்புரம் நகராட்சி 37வது வார்டில் அந்தரத்தில் தொங்கும் குடிநீர் தொட்டி விரைந்து சீரமைக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : 37th Ward ,Viluppuram Municipality ,Viluppuram ,Ragavanbate ,Dinakaran ,
× RELATED விழுப்புரம் மாவட்டத்தில் மின்சாரம் பாய்ந்து 2 சிறுவர்கள் உயிரிழப்பு