×

விளைநிலங்களை கையகப்படுத்தினால் விவசாயிகள் வாழ்வாதாரம் பாதிக்கும்.. 8 வழிச்சாலை திட்டத்தை தடை செய்க : உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு

டெல்லி : சென்னை – சேலம் 8 வழிச்சாலைக்கு அனுமதி அளிக்கும் உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மறு ஆய்வு மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.வழக்கின் பிண்ணனி சென்னை-சேலம் இடையிலான 8 வழி பசுமை சாலை அமைக்கும் திட்டம் தொடர்பான தமிழக அரசின் அறிவிப்பாணையை ரத்து செய்து சென்னை ஐகோர்ட்டு கடந்த ஆண்டு ஏப்ரல் 8-ந் தேதி உத்தரவிட்டது. இதற்கு எதிராக தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையிட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மேல்முறையீடு வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் ஏ.எம்.கான்வில்கர் தலைமையிலான அமர்வு கடந்த மாதம் தீர்ப்பு வழங்கியது. அதில், சென்னை-சேலம் இடையிலான 8 வழிச்சாலை திட்டத்தை செயல்படுத்த உச்சநீதிமன்றம் அனுமதியளித்தது. மேலும் புதிய அறிவிக்கைகளை வெளியிட்டு நிலங்களை மீண்டும் கையகப்படுத்தலாம் என்றும்  சுற்றுச்சூழல் விதிமுறைகளை கட்டாயம் நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். மறு ஆய்வு மனு தாக்கல்!!இந்த நிலையில் சென்னை – சேலம் 8 வழிச்சாலை திட்டத்திற்கு அனுமதி அளித்த உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து சேலம் அயோத்தியாபட்டினத்தைச் சேர்ந்த யுவராஜ் என்பவர் மறு ஆய்வு மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், சென்னை – சேலத்திற்கு தற்போதுள்ள 3 சாலைகளில் ஒன்றை விரிவாக்கம் செய்தால் போதுமானது.புதிதாக நிலத்தை கையகப்படுத்தி புதிய சாலையை அமைக்க வேண்டிய தேவையில்லை.புதிய திட்டப்படி சேலம் – சென்னை 8 வழிச்சாலை அமைத்தால் சுங்கக்கட்டணம் 33% அதிகரிக்கும்.விளைநிலங்களை கையகப்படுத்தினால் விவசாயிகள் வாழ்வாதாரம் பாதிக்கும் என்பதால் 8 வழிச்சாலை திட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும்,’ என்று தெரிவித்துள்ளார். இந்த மனுவை உச்சநீதிமன்றம் விரைவில் விசாரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  …

The post விளைநிலங்களை கையகப்படுத்தினால் விவசாயிகள் வாழ்வாதாரம் பாதிக்கும்.. 8 வழிச்சாலை திட்டத்தை தடை செய்க : உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு appeared first on Dinakaran.

Tags : 8-lane ,Supreme Court ,Delhi ,Chennai-Salem 8-lane ,
× RELATED எதிர்கட்சிகளின் அழுத்தம், சுப்ரீம்...