×

விரைவில் ஓய்வு போப் விருப்பம்

ரோம்: கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் மத தலைவராக நியமிக்கப்படும் போப்பாண்டவர்கள், எப்போதும் ஓய்வு பெறுவதில்லை. 600 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த 2013ல் முறை போப்பாக பதவி வகித்த 16ம் பெனடிக்ட், அப்பதவியை பாதியில் துறந்தார். இதன் பிறகு, போப் பிரான்ஸ் நியமிக்கப்பட்டார். தற்போது, 85 வயதாகும் போப் பிரான்சிஸ் முழங்கால் வலியால் அவதிப்பட்டு வருகிறார். இதனால், அவர் ஓய்வு பெற விரும்பவதாக செய்திகள் வெளியாகின. அதை மறுத்த போப், கனடா நாட்டிற்கு கடந்த வாரம் பயணம் மேற்கொண்டார். அங்கிருந்து நேற்று நாடு திரும்பும் வழியில் விமானத்தில் பேட்டி அளித்த அவர், ‘‘ உடல் அளவில் நான் வேகம் இழந்து விட்டேன். சக்கர நாற்காலியிலேயே இனி அனைத்து இடங்களுக்கும் சுற்றி வர முடியாது. , ஓய்வு பெறும் எண்ணம் இல்லை என்றாலும், அதற்கான கதவுகள் திறந்திருக்கின்றன. நீங்கள் வேறு போப்பாண்டவரை மாற்றலாம். அது விசித்திரமானதோ, பேரழிவு ஏற்படுத்தக் கூடியதோ அல்ல,’ என தெரிவித்தார்….

The post விரைவில் ஓய்வு போப் விருப்பம் appeared first on Dinakaran.

Tags : Pope ,Rome ,Catholic Church ,
× RELATED போப் பிரான்சிஸ் உடல்நலம் பாதிப்பு