சுரண்டை,ஆக.25: தென்காசியில் மாவட்ட நிர்வாகம் சார்பில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் விருது பெற்ற உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு பாராட்டு விழா சுரண்டையில் அமைந்துள்ள கலைஞர் கோட்டத்தில் நடைபெற்றது. இதில் மாவட்டத்தில் சிறந்த ஊராட்சி ஒன்றிய தலைவராக விருது பெற்ற திவ்யா மணிகண்டன், ஒன்றிய அரசு விருது பெற்ற வாடியூர் ஊராட்சி மன்ற தலைவர் பதிவர், முத்தம்மாள்புரம் ஊராட்சி மன்ற தலைவர் முருகன் உள்ளிட்ட பலருக்கு விருது வழங்கி தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் ஜெயபாலன் பாராட்டினார். பின்னர் அவர் பேசுகையில், ‘மக்கள் பிரதிநிதிகள் அனைவரும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வழியில் 24 மணி நேரமும் மக்கள் பணி செய்ய வேண்டும். மாவட்ட கலெக்டர் கையால் விருது பெற்ற நீங்கள் விரைவில் மாநில அளவில் தமிழக முதல்வர் கையால் விருது பெற வேண்டும்.நாட்டின் வளர்ச்சி கிராமப்புறத்தில் இருந்து தான் தொடங்குகிறது.
பொதுமக்கள் தேவைகள் அனைத்தும் தமிழக முதல்வரிடம் தெரிவித்து நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார். நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர்கள் அன்பழகன், மகேஷ் மாயவன், மாவட்ட துணை செயலாளர் கென்னடி, பொதுக்குழு உறுப்பினர்கள் ரவிச்சந்திரன், ராஜேஸ்வரன், நகர செயலாளர் வெங்கடேசன், கீழப்பாவூர் பேரூராட்சி தலைவர் ராஜன், நிர்வாகிகள் சங்கீதா சுதாகர், பொன் அறிவழகன், வளனரசு, ரமேஷ், பொன் செல்வன், சுரண்டை முன்னாள் நகர செயலாளர் முத்துக்குமார், சாமுவேல் மனோகர், பூல்பாண்டியன், ஜெயராஜ், சுப்பிரமணியன், சங்கரநயினார், கூட்டுறவு கணேசன், கவுன்சிலர்கள் பரமசிவன், வைகை கணேசன், ஜேம்ஸ், சசிகுமார், கோமதிநாயகம், செல்வகுமார், முத்துக்குமார், வெள்ளத்துரை பாண்டியன், ஆறுமுகசாமி பாண்டியன், ஜோசியர் தங்க இசக்கி, மோகன், சங்கர், சார்லஸ், அல்லாபிச்சை, அருணா, மாறன், சுதன், சங்கரபாண்டியன், சபர் நிஷா, கவுன்சிலர்கள் சிவஞானசண்முகலட்சுமி, அந்தோணி சுதா, செல்வி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
The post விருது பெற்ற உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு பாராட்டு விழா appeared first on Dinakaran.