×

விருதுநகர் அருகே சாலையோர கிணற்றால் விபத்து அபாயம்

விருதுநகர், பிப். 5: விருதுநகர் அருகே சாலையோர திறந்தவெளி கிணறால் விபத்து அபாயம் நிலவுகிறது. எனவே சுற்றுச்சுவரை உயர்த்தி கட்ட வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. சாலையோர கிணறுகளில் டூவீலர், கார், வேன் தவறி விழுந்த விபத்தில் பலர் உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. சாலையோர கிணறுகளில் சுற்றுச்சுவரை உயர்த்தி கட்ட வேண்டும் என்ற உத்தரவு நடைமுறையில் உள்ளது.

விருதுநகர் அருகே சின்னப்பேராலியில் இருந்து பெரிய பேராலி செல்லும் சாலையில் தடுப்புச்சுவர் இல்லாத திறந்தவெளி கிணறு உள்ளது. இந்த கிணற்றில் தண்ணீர் நிரம்பி காணப்படுகிறது. இந்த சாலையில் பள்ளி, கல்லூரி வாகனங்கள், அரசு பேருந்துகள், வேன்கள், லாரிகள், நூற்றுக்கணக்கான பைக்குகள் தினசரி சென்று வருகின்றன.

மேலும் சாலையில் இருந்து கிணறு இருக்குமிடம் சரிவாக இருப்பதால் விபத்து ஏற்படும் அபாயமும், வாகனங்கள் சறுக்கி கிணற்றில் விழும் அபாயமும் அதிகம் உள்ளது. எனவே, மாவட்ட நிர்வாகம் சம்பந்தப்பட்ட இடத்தை ஆய்வுசெய்து கிணற்றின் சுற்றுச்சுவரை உயர்த்தி கட்ட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கிராம மக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post விருதுநகர் அருகே சாலையோர கிணற்றால் விபத்து அபாயம் appeared first on Dinakaran.

Tags : Virudhunagar ,Dinakaran ,
× RELATED விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே...