×

விபத்தில் முதியவர் பலி

திருத்தணி: திருத்தணி அடுத்த தாழவேடு தொம்பரம் காலனியை சேர்ந்தவர் கிருஷ்ணன் (50). இவர் பன்றி வியாபாரி. இவர் தனது நண்பர் சின்னா என்பவருடன் பைக்கில் கனகம்மாசத்திரம் சென்றுவிட்டு, பின்னர் அங்கிருந்து திருத்தணி நோக்கி வந்தார். ரகுநாதபுரம் என்ற பகுதியில் வரும்போது எதிரே வந்த பைக், இவரது பைக் மீது நேருக்குநேர் பயங்கரமாக மோதியது. இதில், படுகாயமடைந்த கிருஷ்ணன் சம்பவ இடத்திலேயே பலியானார்.

சின்னா காயத்துடன் மயங்கினார். விபத்தை ஏற்படுத்திய பைக்கை ஓட்டி வந்த நபர் அங்கிருந்து தப்பியோடிவிட்டார். தகவல் அறிந்த கனம்மாசத்திரம் போலீசார் விரைந்து சென்று, கிருஷ்ணன் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சின்னாவை அதே மருத்துவமனையில் சேர்த்தனர். இதுசம்பந்தமாக, போலீசார் வழக்குபதிவு செய்து விபத்து ஏற்படுத்திவிட்டு தப்பிய நபரை தேடி வருகின்றனர்.

The post விபத்தில் முதியவர் பலி appeared first on Dinakaran.

Tags : Thiruthani ,Krishnan ,Thomparam Colony ,
× RELATED சவ ஊர்வலத்தின்போது பட்டாசு வெடித்தவரின் கைவிரல் துண்டானது