×

விபத்தில் மனைவியை இழந்த கனடா டாக்டர் குடும்பத்திற்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்க உத்தரவு: இன்சூரன்ஸ் நிறுவனங்களின் அப்பீல் தள்ளுபடி

மதுரை: கனடா நாட்டைச் சேர்ந்தவர் டாக்டர் தாமஸ் ஜான். தனது பெயரில் மருத்துவ நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது மனைவி ஜெசி ஜான், தனது கணவரின் மருத்துவ நிறுவனத்தில் மேலாளராகவும், பங்குதாரராகவும் இருந்தார். இவர்கள் குடும்பத்துடன் கடந்த 2010ல் கோடை விடுமுறைக்கு சுற்றுலா வந்தனர். கடந்த 28.7.2010ல் காரில் மதுரை மாவட்டம், திருமங்கலம் நான்குவழிச்சாலையில் குதிரைசாலை விளக்கு அருகே சென்றபோது முன்னால் சென்ற 21 அடி நீள டாரஸ் லாரி, எந்த சிக்னலும் கொடுக்காமல் வலது பக்கம் திரும்பியது. இதனால் பின்னால் வந்த டாக்டரின் கார், டாரஸ் லாரி மீது மோதியது. இதில், ஜெசி ஜான் பலியானார். மற்றவர்கள் காயமடைந்தனர். இதையடுத்து இழப்பீடு கோரி தாமஸ் ஜான், மகன் ஷான் ஜான், மகள் ஷீனா ஜான் தரப்பில் மதுரை மாவட்ட மோட்டார் வாகன விபத்து இழப்பீட்டு தீர்ப்பாயத்தில் மனு செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த தீர்ப்பாயம், விபத்தை ஏற்படுத்திய லாரி மற்றும் விபத்தில் சிக்கிய கார் ஆகியவை இன்சூரன்ஸ் செய்யப்பட்ட நிறுவனங்கள் தரப்பில் டாக்டர் தாமஸ் ஜான் குடும்பத்தினருக்கு ரூ. 1.05 கோடி இழப்பீடு வழங்க 2017ல் உத்தரவிட்டது. இதை எதிர்த்து இன்சூரன்ஸ் நிறுவனங்கள் ஐகோர்ட் மதுரை கிளையில் அப்பீல் செய்தன. இந்த மனுக்களை விசாரித்த நீதிபதிகள் ஆர்.சுப்ரமணியன், என்.சதீஷ்குமார் ஆகியோர், தீர்ப்பாயத்தின் உத்தரவை உறுதி செய்து, இன்சூரன்ஸ் நிறுவனங்களின் அப்பீல் மனுக்களை தள்ளுபடி செய்தனர். 8 வாரத்திற்குள் இழப்பீட்டு பணத்தை டெபாசிட் செய்யவும் உத்தரவிட்டனர். …

The post விபத்தில் மனைவியை இழந்த கனடா டாக்டர் குடும்பத்திற்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்க உத்தரவு: இன்சூரன்ஸ் நிறுவனங்களின் அப்பீல் தள்ளுபடி appeared first on Dinakaran.

Tags : Madurai ,Dr. ,Thomas John ,Canada ,Dinakaran ,
× RELATED மதுரை தோப்பூர் அரசு காசநோய்...