×

விடுமுறையில் உள்ள சத்துணவு சாப்பிடும் மாணவர்களுக்கு உலர் உணவு பொருளுடன் 5 முட்டைகள் வழங்க வேண்டும்: அரசு உத்தரவு

சென்னை: விடுமுறையில் உள்ள சத்துணவு சாப்பிடும் மாணவர்களுக்கு உலர் உணவுப்பொருட்களுடன் 5 முட்டைகள் வழங்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. இது குறித்து அரசாணையில் கூறப்பட்டுள்ளதாவது: சமூக நல மற்றும் சத்துணவு திட்டத்துறையின் கடந்த 2020ம்  ஆண்டு செப்டம்பர் அரசாணையில், கொரோனா தொற்று காலத்தில்  சத்துணவு சாப்பிடும் பயனாளிகளுக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்க உத்தரவிடப்பட்டது. அதன்படி 2021ம்  ஆண்டு நவம்பர் மாதம் வரையில்  உலர் உணவுப் பொருட்களான அரிசி, பருப்பு, முட்டை வினியோகம் செய்யப்பட்டது. இந்நிலையில் தற்போது தொற்று அதிகரித்துள்ள நிலையில் பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால், மாணவர்களுக்கு உலர் உணவுப் பொருட்களுடன் முட்டையும் வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்படுகிறது. இதன்படி, தொடக்கப் பள்ளிகளில் 1-5ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு ஒரு மாணவருக்கு 100 கிராம் அரிசியும், 40 கிராம் பருப்பும் 6-8ம் வகுப்பு மாணவர்களுக்கு ஒரு மாணவருக்கு 150 கிராம் அரிசியும், 56 கிராம் பருப்பும் வழங்க வேண்டும்.  மாணவர்கள் ஏதாவது ஒரு அடையாள அட்டையுடன் வாரத்தில் ஒரு நாளில் குறிப்பிட்ட பள்ளிகளுக்கு வந்து மேற்கண்ட பொருட்களை பெற்றுக் கொள்ளலாம். தலைமை ஆசிரியர்கள் மாணவர்களுக்கு டோக்கன் வழங்கி, அந்த டோக்கனை மாணவர்கள் பெற்று சத்துணவுப்பணியாளரிடம் ஒப்படைத்து பொருட்களை பெற்றுக் கொள்ள வேண்டும். 2022 ஜனவரி மாதத்துக்கு ஒரு மாணவருக்கு தலா 5 முட்டைகள் வழங்க வேண்டும். இவ்வாறு அரசாணையில் கூறப்பட்டுள்ளது. …

The post விடுமுறையில் உள்ள சத்துணவு சாப்பிடும் மாணவர்களுக்கு உலர் உணவு பொருளுடன் 5 முட்டைகள் வழங்க வேண்டும்: அரசு உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Chennai ,
× RELATED பொது இடங்களில் சட்டவிரோதமாக குப்பை...