×

விடா முயற்சிக்கு கிடைத்த வெற்றி!: 135 நாட்களாக செல்போன் கோபுரத்தின் மீதேறி போராடிய பட்டதாரி ஆசிரியரின் கோரிக்கைக்கு பணிந்தது பஞ்சாப் அரசு..!!

சண்டிகர்: பஞ்சாப் மாநிலத்தில் வேலை கிடைக்காத பட்டதாரி ஆசிரியர் சுரீந்தர் சிங் தனது கோரிக்கையை அரசு முற்றிலும் ஏற்றுக்கொண்டதால் 135 நாட்கள் வித்யாசமாக நடத்தி வந்த வினோத போராட்டத்தை முடித்துக்கொண்டிருக்கிறார். பாட்டியாலாவில் உள்ள 260 அடி உயரம் கொண்ட மிக பிரம்மாண்டமான செல்போன் கோபுரத்தில் கடந்த 135 நாட்களுக்கு முன்பு ஏறி போராட்டம் நடத்த தொடங்கியவர் தான் சுரீந்தர் சிங். பஞ்சாப் மாநிலத்தில் உள்ள ஆயிரக்கணக்கான தொடக்கப்பள்ளி ஆசிரியர் பயிற்சி தேர்வு எழுதியவர்கள் மற்றும் ஆசிரியர் தேர்வுக்கு எழுதியவருக்கு வேலை வழங்க கோரி இந்த போராட்டத்தை தொடங்கினார். அரசு தனது கோரிக்கையை ஏற்றுக்கொள்ள மறுத்து வந்ததால் கோபுரத்தின் உச்சியிலேயே அவர் தம் போராட்டத்தை முன்னெடுத்து வந்தார். 135 நாட்களுக்கு பின்னர் அரசு தனது கோரிக்கையை ஏற்றுக்கொண்டதை தொடர்ந்து போராட்டத்தை முடித்துக்கொண்ட சுரீந்தர் சிங்கை போலீசார் கயிறு கட்டி கீழே இறக்கினர். 36 வயதான வேலை கிடைக்காத பட்டதாரி ஆசிரியரான சுரீந்தர் சிங்கிற்கு 4 மாதங்களுக்கு மேலாக உணவு, தண்ணீர், ஜூஸ் போன்றவற்றை சில உள்ளூர் இளைஞர்கள் கயிறு மூலம் கோபுரத்தின் உச்சிக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே சுரீந்தர் சிங்கின் கோரிக்கையை ஏற்ற பஞ்சாப் அரசு, நேற்று 6,635 ஆசிரியர் பணியிடங்கள் உடனடியாக நிரப்பப்படும் என அறிவித்தது. இந்த அறிவிப்பை தொடர்ந்து  சுரீந்தரை வரவேற்க லட்சக்கணக்கான வேலை கிடைக்காத பட்டதாரிகள் வரவேற்க குவிந்தனர். கீழே இறக்கப்பட்ட சுரீந்தர் சிங், உடல் மிகவும் நலிந்து காணப்பட்டதால் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவர் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்….

The post விடா முயற்சிக்கு கிடைத்த வெற்றி!: 135 நாட்களாக செல்போன் கோபுரத்தின் மீதேறி போராடிய பட்டதாரி ஆசிரியரின் கோரிக்கைக்கு பணிந்தது பஞ்சாப் அரசு..!! appeared first on Dinakaran.

Tags :
× RELATED மராட்டியம், உ.பி., தெலங்கானா, குஜராத்...