×

விசாகப்பட்டிணத்தில் இருந்து கேரளாவுக்கு கஞ்சா கடத்திய வாலிபர் கைது

 

பாலக்காடு, செப்.11: விசாகப்பட்டிணத்தில் இருந்து கேரளாவிற்கு கஞ்சா கடத்திய வாலிபரை ரயில்வே போலீசார் கைது செய்தனர். கேரளா மாநிலம், பாலக்காடு ரயில் நிலையத்தில் ரயில்வே போலீசார் மற்றும் பரளி ரேஞ்சு கலால்துறை அதிகாரிகள் ரயில் பயணிகளின் உடமைகளை சோதனையிட்டனர். இந்நிலையில் பிளாட்பார்மில் சந்தேகப்படும்படியாக நின்ற வாலிபரை பிடித்து போலீசார் விசாரித்தனர். அப்போது, அந்த வாலிபர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார். இதில் சந்தேகமடைந்த போலீசார் அவரது உடமைகளை சோதித்தனர்.

இந்த சோதனையில் 9.80 கிலோ கஞ்சா பொட்டலம் மறைத்து வைத்து இருந்ததை கண்டுபிடித்தனர். இதையடுத்து அதனை பறிமுதல் செய்தனர். இதையடுத்து வாலிபரிடம் போலீசார் விசாரணை நடத்தியதில், கேரள மாநிலம் மலப்புரம் அரீக்கோடு பகுதியை சேர்ந்த இஸ்ஹாக் (29) என தெரிய வந்தது. இவர் விசாகப்பட்டிணத்தில் இருந்து கஞ்சா பொட்டலங்கள் வாங்கி ரயில் மார்க்கமாக மலப்புரத்திற்கு கஞ்சா கடத்தி வந்துள்ளார்.

மேலும் இதனை மலப்புரத்திலுள்ள பள்ளி, கல்லூரி மற்றும் வெளிமாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்களுக்கு விற்பனை செய்ய கொண்டு வந்ததாக இஸ்ஹாக் போலீசாரிடம் தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து வாலிபர் இஸ்ஹாக்கை ஆர்பிஎப் சி.ஐ கேசவதாஸ், பரளி ரேஞ்சு கலால்துறை இன்ஸ்பெக்டர் பாலசுப்ரமணியம் ஆகியோர் தலைமையில் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவின் மதிப்பு சுமார் 5 லட்சம் ரூபாய் இருக்கும் என போலீசார் தெரிவித்தனர்.

The post விசாகப்பட்டிணத்தில் இருந்து கேரளாவுக்கு கஞ்சா கடத்திய வாலிபர் கைது appeared first on Dinakaran.

Tags : Visakhapatnam ,Kerala ,Palakkad ,
× RELATED ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில்...