×

வாக்குப்பதிவு அலுவலர்களுக்கான இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்பு-மாவட்ட தேர்தல் பார்வையாளர் நேரில் ஆய்வு

கோவை : கோவை மாவட்டம் நிர்மலா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் நேற்று நடைபெற்ற வாக்குப்பதிவு அலுவலர்களுக்கான இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்பினை தேர்தல் பார்வையாளர் ஹர் சஹாய் மீனா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி வாக்குச்சாவடிகளுக்கு நியமனம் செய்யப்பட்ட வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு வாக்குச்சாவடியில் செய்ய வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிக்களுக்குட்பட்ட 44 -இடங்களில் இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்பு நடைபெற்றது.கோவை மாநகராட்சி வடக்கு மண்டலத்திற்கு பீளமேடு பிஎஸ்ஜி தொழில்நுட்ப கல்லூரி, கிழக்கு மற்றும் தெற்கு மண்டலத்திற்கு குனியமுத்தூர்  ஆயூஷா மஹால், மேற்கு மண்டலத்திற்கு ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி கலையரங்கத்திலும்,  மத்திய மண்டலத்தில் நிர்மலா மகளிர் கலை அறிவியல் கல்லூரியிலும் வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு பயிற்சி வகுப்புகள்  நடைபெற்றது.மேட்டுப்பாளையம், மதுக்கரை நகராட்சிகளுக்கு அந்தந்த நகராட்சி அலுவலகத்திலும்,  காரமடை நகராட்சிக்கு லாரி உரிமையாளர்கள் சங்க திருமண்டபத்திலும், கருமத்தம்பட்டி நகராட்சிக்கு கத்தோலிக் தேவங்கர் திருமண்டபத்திலும், கூடலூர் நகராட்சிக்கு சாமிசெட்டிபாளையத்திலுள்ள லட்சுமி துரை திருமண மணடபம், பொள்ளாச்சி நகராட்சிக்கு  எம்ஆர்சி மண்டபத்திலும், வால்பாறை நகராட்சிக்கு அரசு கலை அறிவியல் கல்லூரியிலும் வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு பயிற்சி வகுப்புகள்  நடைபெற்றது.மேலும் மாவட்டத்தில் உள்ள 33 பேரூராட்சி பகுதிகளிலும் அந்தந்த பேரூராட்சி அலுவலகங்களுக்கு அருகில் உள்ள திருமண மண்டபங்கள், சமுதாய கூடங்களில் வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு பயிற்சி வகுப்புகள்  நடைபெற்றது.இப்பயிற்சி வகுப்பில் பங்குபெறும் அலுவலர்கள் அனைவருக்கும் வாக்குப்பதிவு மையத்தில் மேற்கொள்ளப்படும் அனைத்து வித பணிகள் குறித்தும் வாக்குப்பதிவிற்கு முந்தைய நடைமுறை, வாக்குப்பதிவின்போது பின்பற்ற வேண்டிய விதிகள், வாக்குப்பதிவு தலைமை அலுவலர் பூர்த்தி செய்யவேண்டிய படிவங்கள், சம்மந்தப்பட்ட அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் மற்றும் மின்னணு வாக்குப்பதிவு  இயந்திரங்கள் செயல்பாடு உள்ளிட்டவை குறித்து தேர்தல் பணியாற்றும் பணியாளர்களுக்கு  பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. நிர்மலா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற வாக்குப்பதிவு அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பினை கோவை மாவட்டத்திற்கான தேர்தல் பார்வையாளர் ஹர் சஹாய் மீனா நேரில் பார்வையிட்டு தேர்தல் பணியாற்றிடும் அலுவலர்களுக்கு செயல்முறை விளக்கம் அளிக்க அறிவுறுத்தியதோடு, மின்னனு வாக்குப்பதிவு இயந்திரம் குறித்து வாக்குப்பதிவு அலுவலர்கள் அனைவருக்கும் போதிய தெளிவுரைகளை வழங்கவும் பயிற்றுனர்களுக்கு உத்தரவிட்டார். இவ்வாய்வின்போது மாவட்ட கலெக்டர் சமீரன், மாநகராட்சி கமிஷனர் ராஜகோபால்  சுன்கரா, உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) துவாரகநாத்சிங், வருவாய்  கோட்டாட்சியர் இளங்கோ ஆகியோர் கலந்து கொண்டனர்.6192 அலுவலர்களுக்கு பயிற்சி: கோவை மாநகராட்சிக்குட்பட்ட 1,290 வாக்குச்சாவடிகளில் பணியாற்ற உள்ள 1,290 வாக்குச்சாவடி தலைமை அலுவலர்களுக்கும், 3,870 வாக்குப்பதிவு அலுவலர்களுக்கும் காத்திருப்பில் உள்ள 258 வாக்குச்சாவடி தலைமை அலுவலர்கள் மற்றும் 774 வாக்குப்பதிவு அலுவலர்கள் என மொத்தம் 6,192 அலுவலர்களுக்கு இரண்டாம் கட்டமாக பயிற்சி பெற்ற மண்டல அலுவலர்களால் தேர்தல் பயிற்சி வகுப்புகள் நடைபெற்றது. தேர்தல் அலுவலர்களுக்கு தேர்தல் பணியினை எவ்வாறு மேற்கொள்வது? படிவங்கள் பூர்த்தி செய்வது மற்றும் வாக்குப்பதிவு இயந்திரங்களை எவ்வாறு பயன்படுத்துவது? அதன் செயல்பாடுகள் குறித்து பயிற்சியளித்தார்கள். இந்த பயிற்சியில் கலந்து கொண்ட அலுவலர்கள் தபால் ஓட்டு போடுவதற்கு ஏதுவாக அவர்களுக்கு அதற்கான படிவம்-15ஐ பயிற்சி வகுப்புகளில் வழங்குவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டது….

The post வாக்குப்பதிவு அலுவலர்களுக்கான இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்பு-மாவட்ட தேர்தல் பார்வையாளர் நேரில் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Govai ,Nirmala Women's ,Art Science ,College ,Govai District ,Dinakaran ,
× RELATED நாட்டிலேயே பாஜக ஆளும் மாநிலங்களில்...