×

வாகன ஓட்டிகளுக்கு கவன சிதறல் ஏற்படாமல் இருக்க வெளிநாடுகளில் இருப்பதுபோன்று சென்னையில் தெரு பெயர்ப்பலகை: மாநகராட்சிக்கு தமிழ்நாடு மாநில தகவல் ஆணையம் பரிந்துரை

சென்னை: வாகன ஓட்டிகளுக்கு கவன சிதறல் ஏற்படாத வகையில், வெளிநாடுகளில் உள்ளது போன்ற பெயர் பலகைகளை தெருக்களில் அமைக்க வேண்டும் என சென்னை மாநகராட்சிக்கு தமிழ்நாடு மாநில தகவல் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் மேல்முறையீட்டு மனுவை, ‘‘சென்னை நெசப்பாக்கத்தை சேர்ந்த பேச்சிமுத்து என்பவர் தாக்கல் செய்துள்ளார். அதில், ராமாபுரம் கிராம பஞ்சாயத்துக்கு உட்பட்ட ஜெய் பாலாஜி நகர் மெயின்ரோடு, ஜெய்பாலாஜி நகர் விரிவாக்கம், ஜெய்பாலாஜி நகர் இணைவு ஆகிய பகுதிகளில் அருகருகே அமைக்கப்பட்டுள்ளதால் குழப்பம் ஏற்பட்டுள்ளது. ஒரு தெரு, வார்டு குறித்த அறிவிப்பு பலகைகள் 2 இடங்களிலும் வைக்கப்பட்டுள்ளது. இதனால் தண்ணீர், சொத்துவரி, எரிவாயு, அஞ்சல், கூரியர் போன்ற பொது சேவைகளைப் பயன்படுத்துவதிலும், பயன்பாட்டு சேவைகளை பயன்படுத்துவதிலும் பல குழப்பங்கள் உள்ளன’’ என அதில் குறிப்பிட்டு இருந்தார். மனுதாரரின் 2வது முறையீட்டு மனு தொடர்பான விசாரணை 29.9.22 அன்று நடந்தது. இந்த மீது விசாரணை மேற்கொண்ட  தமிழ்நாடு தகவல் ஆணையத்தின் ஆணையர் முத்துராஜ், மனுதாரர் தங்கள் பகுதியில் முறையான பெயர் பலகை வைக்கப்படாததால் தண்ணீர் வரி, சொத்து வரி செலுத்துதல், எரிவாயு, அஞ்சல், கூரியர் போன்ற பொது சேவைகளைப் பயன்படுத்துவதிலும் குழப்பங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். கோடிக்கணக்கான மக்கள் வாழ்கின்ற பெருநகரமான சென்னையில், போக்குவரத்து வழிகளில் முறையான பெயர் பலகைகள் வைக்கப்படாமல் உள்ளது சரியானதல்ல. மேலும், சென்னை மாநகர பிரதான சாலைகளில், ஒரு சில இடங்களில் போக்குவரத்து சிக்னல்களின் அருகிலேயே மருந்தகம் இருக்கின்றன என்பதற்கான பச்சை விளக்கு அடையாள குறியீடு எரிய விடப்படுகின்றன. அதனால் பொதுமக்களால் சிக்னல்களை சரியாக புரிந்துகொள்ள இயலாமல், விபத்து ஏற்படுவதற்கு காரணமாகிறது. இந்த வழக்கு 1.12.22 அன்று விசாரணைக்கு ஒத்தி வைக்கப்பட்டது. பின்னர் 1.12.22 அன்று நடந்த விசாரணையில் மனுதாரர் மற்றும் சென்னை பெருநகர மாநகராட்சி கண்காணிப்பு பொறியாளர்கள் மற்றும் பொது தகவல் அலுவலர்கள் ஆகியோர் பங்கேற்றனர். லண்டனில், பொதுமக்கள் பயன்பெறும் வகையில், சாலைகளில் தெருவிளக்கு கம்பங்களில் மின்சாரம் பாயாத வகையில், பிளாஸ்டிக் பலகை பயன்படுத்தி, தெருக்களின் பெயர்கள் மற்றும் வழிகளுடன் கூடிய பெயர் பலகை பொருத்தப்பட்டுள்ளது. அதுபோல சென்னை பெருநகர சாலைகளின் முக்கிய பகுதிகள், சாலையின் மையத்தில் அமைக்கப்பட்டுள்ள கம்பங்களில் வாகன ஓட்டிகளுக்கு கவனச்சிதறல் ஏற்படாத வகையில், சாலைகள் மற்றும் தெருக்களின் பெயரை மின்சாரம் பாயாத குறைந்த செலவினங்களில் பெயர்பலகைகள் அமைக்கவும், வெளியூர் மற்றும் உள்ளூர் பயணிகள் அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில், பேருந்து நிறுத்தங்களில் பெயரை பெரிய அளவிலான எழுத்துகளில் தெளிவாக தெரியும் வகையில்  எழுதி வைத்திட வேண்டும். மேலும் பிளாஸ்டிக் பலகைகளை பயன்படுத்தி தெருக்களின் பெயர்கள் மற்றும் வழிகளுடன் கூடிய பெயர் பலகைகளை வைக்கலாம் என சென்னை, மாநகராட்சி கண்காணிப்பு பொறியாளரை கேட்டுக்கொள்ளப்படுகிறது எனக்கூறி தமிழ்நாடு தகவல் ஆணையத்தின் ஆணையர் முத்துராஜ் இந்த வழக்கை முடித்து வைத்தார்….

The post வாகன ஓட்டிகளுக்கு கவன சிதறல் ஏற்படாமல் இருக்க வெளிநாடுகளில் இருப்பதுபோன்று சென்னையில் தெரு பெயர்ப்பலகை: மாநகராட்சிக்கு தமிழ்நாடு மாநில தகவல் ஆணையம் பரிந்துரை appeared first on Dinakaran.

Tags :
× RELATED அனைத்து வகைகளிலும் வடகிழக்கு...