×

வத்தலக்குண்டு பள்ளியில் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு

வத்தலக்குண்டு, செப். 17: வத்தலக்குண்டு மகாலட்சுமி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பேரூராட்சி, சுகாதாரத்துறை சார்பாக டெங்கு காய்ச்சல் முன்னெச்சரிக்கை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. பள்ளி தலைமை ஆசிரியை எலிசபெத் பாத்திமா தலைமை வகித்தார். பேரூராட்சி செயல் அலுவலர் ராஜேந்திரன், துணை தலைவர் தர்மலிங்கம் முன்னிலை வகித்தனர். பேரூராட்சிகளின் துணை இயக்குனர் மனோரஞ்சிதம் டெங்கு காய்ச்சலை எவ்வாறு தடுப்பது குறித்து விளக்கி பேசினார். ெதாடர்ந்து பள்ளி மாணவிகளுக்கு டிஜிட்டல் திரையில் டெங்கு காய்ச்சலை எவ்வாறு தடுப்பது குறித்து விளக்கி காண்பிக்கப்பட்டது. இதில் பேரூராட்சி தலைமை எழுத்தர் செல்லப்பாண்டி, கவுன்சிலர் ராமுத்தாய் மற்றும் ஆசிரியர்கள், மாணவிகள் என பலர் கலந்து கொண்டனர். சுகாதார ஆய்வாளர் அகமது ரிபாய் நன்றி கூறினார்.

The post வத்தலக்குண்டு பள்ளியில் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு appeared first on Dinakaran.

Tags : Wattalakundu school ,Vathalakundu ,Vathalakundu Mahalakshmi Girls High School ,
× RELATED வத்தலக்குண்டு அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர் சேர்க்கை அதிகரிப்பு