×

வணிகர் தினத்தை முன்னிட்டு கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில் சில்லறை விற்பனை கடை இயங்கும்; வியாபாரிகள் அறிவிப்பு

அண்ணாநகர்: வணிகர்கள் தினத்தை முன்னிட்டு கோயம்பேடு மார்க்கெட்டில் சில்லறை காய்கறி விற்பனை கடைகள், பூக்கடைகள் இயங்கும் என்று வியாபாரிகள் அறிவித்துள்ளனர். சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் 2 ஆயிரம் காய்கறி கடைகள், 2,000 பழக் கடைகள் மற்றும் ஏராளமான பூக்கடைகள் உள்ளது. மேலும் 500 உணவு தானிய கடைகளும் செயல்பட்டு வருகிறது. மே 5ம் தேதி, வணிகர்கள் தினத்தை முன்னிட்டு கோயம்பேடு மார்க்கெட் முழுவதும் கடைகள் அடைக்கப்படும் என்று காய்கறி மார்க்கெட் சங்கங்களின் கூட்டமைப்பு  நேற்று அறிவித்தது. இந்தநிலையில், கோயம்பேடு மார்க்கெட்டில் இயங்கக்கூடிய சில்லறை காய்கறி கடைகளும் பூ மார்க்கெட்டும் அன்றைய தினத்தில் செயல்படும் என்று வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து சிறு வியாபாரிகள் கூறுகையில், ‘’கோயம்பேடு மார்க்கெட்டில் கோடை வெயிலின் தாக்கத்தால் ஏற்கனவே தக்காளி விலைகள் அதிகரித்துள்ளது. வரும் 5ம்தேதி அனைத்து கடைகளையும் மூடிவிட்டால் பொதுமக்கள் பொருட்கள் வாங்குவதற்கு மிகவும் சிரமப்படுவார்கள். 6ம்தேதி முகூர்த்த நாள் என்பதால் அன்றைய தினம் பூக்களின் விற்பனை அதிகரிக்க கூடும் என்பதால் மே 5ம் தேதி காய்கறி சில்லறை கடைகளும் பூ மார்க்கெட்டும் வழக்கம்போல் செயல்படும்’ என்றனர்….

The post வணிகர் தினத்தை முன்னிட்டு கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில் சில்லறை விற்பனை கடை இயங்கும்; வியாபாரிகள் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Koyambedu Vegetable Market ,Traders' Day ,Annanagar ,Traders ,Koyambedu Market ,Traders Day.… ,Traders Day ,Dinakaran ,
× RELATED வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு...