×
Saravana Stores

வடமதுரை அருகே வேன் கவிழ்ந்து விபத்து

வடமதுரை, ஜன. 7: வடமதுரை அருகே, உருளைக்கிழங்கு ஏற்றி சென்ற சரக்கு வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் நாயுடுபுரம் பகுதியில் இருந்து உருளைக்கிழங்கு லோடு ஏற்றி வந்த சரக்கு வேன் ஒன்று, திருச்சி காய்கறி சந்தைக்கு சென்று கொண்டிருந்தது. சரவணக்குமார் (28) என்பவர் வேனை ஓட்டி வந்தார். வேன் உரிமையாளர் தமிழ்மணி (27) உடன் வந்துள்ளார்.

வடமதுரை அருகே திண்டுக்கல்-திருச்சி நான்கு வழிச்சாலையில் நாடு கண்டானூர் பிரிவு அருகே, வேனின் பின்பக்க இடது புறசக்கரத்தின் ஆக்சில் திடீரென உடைந்தது. இதில், நிலைதடுமாறிய வேன் சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், இருவரும் காயமின்றி உயிர் தப்பினர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்து வந்த நெடுஞ்சாலைத்துறை ரோந்து போலீசார், வேனைஅப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர்.

The post வடமதுரை அருகே வேன் கவிழ்ந்து விபத்து appeared first on Dinakaran.

Tags : Vadamadurai ,Naydupuram ,Dindigul district ,Trichy ,Saravanakumar… ,Dinakaran ,
× RELATED அய்யலூர் அருகே அனுமதியின்றி சேவல் சண்டை நடத்திய 2 பேர் கைது