×

லஞ்சம் வாங்கியதாக கைது செய்யப்பட்ட கடலூர் வட்டார போக்குவரத்து அலுவலர் சஸ்பெண்ட்

கடலூர், ஜூன் 16: லஞ்சம் வாங்கியதாக கைது செய்யப்பட்ட கடலூர் வட்டார போக்குவரத்து அலுவலரை சஸ்பெண்ட் செய்து துறை செயலாளர் உத்தரவிட்டுள்ளார். கடலூர் அருகே உள்ள பத்திரக்கோட்டையை சேர்ந்தவர் வெங்கடாஜலபதி (35). இவர் தனது செப்டிக் டேங்க் வாகனத்தை பெயர் மாற்றம் செய்ய கடலூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளார். அதற்கான விண்ணப்ப கட்டணத்தையும் செலுத்தியுள்ளார். இந்நிலையில் பெயர் மாற்றம் செய்வதற்கு அப்போது வட்டார போக்குவரத்து அலுவலராக இருந்த சுதாகர் என்பவர் ரூ.5,500 லஞ்சம் கேட்டுள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத வெங்கடாஜலபதி இது குறித்து லஞ்ச ஒழிப்பு துறை போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

கடந்த மாதம் 31ம் தேதி ரூ.5500 லஞ்சம் கொடுக்கும் போது வட்டார போக்குவரத்து அலுவலர் சுதாகரையும் அவரது உதவியாளரையும் லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். இதையடுத்து முதன்மைச் செயலாளர் அமுதா, ஆர்டிஓ சுதாகரை சஸ்பெண்ட் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும் கைது நடவடிக்கையின் போது கடலூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் இருந்து கணக்கில் வராத லஞ்சப்பணம் ரூபாய் 2 லட்சத்து 50 ஆயிரம் கைப்பற்றப்பட்டது. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட ஓட்டுநர் பயிற்சி பள்ளிகளின் உரிமத்தை ரத்து செய்வது தொடர்பாக, கடலூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

The post லஞ்சம் வாங்கியதாக கைது செய்யப்பட்ட கடலூர் வட்டார போக்குவரத்து அலுவலர் சஸ்பெண்ட் appeared first on Dinakaran.

Tags : Cuddalore ,transport ,Dinakaran ,
× RELATED தொழிற்சாலையில் ரசாயன கசிவு