×

ரேஷன் கடைக்கு புதிய கட்டிடம் எம்எல்ஏ துவக்கி வைத்தார்

 

பரமக்குடி: பரமக்குடி அருகே கருங்குளம் மற்றும் நென்மேனி ஆகிய கிராமங்களில் புதிய ரேஷன் கடை கட்டிடம் கட்டுவதற்கு எம்எல்ஏ முருகேசன் பூமி பூஜை செய்து பணியினை தொடங்கி வைத்தார். பரமக்குடி கிழக்கு ஒன்றியம் கலையூர் ஊராட்சி கருங்குளம் மற்றும் நென்மேனி ஆகிய கிராமங்களில் புதிய ரேஷன் கடையை கட்டித்தர வேண்டும் என பொதுமக்கள் எம்எல்ஏ முருகேசனிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து வருவாய்த்துறை அதிகாரிகளுடன் கலந்து ஆலோசனை செய்து இடம் தேர்வு செய்யப்பட்டது.

இதனை தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து புதிய நியாய விலை கடை கட்டுவதற்கான பூமி பூஜையை எம்எல்ஏ முருகேசன் துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் கிழக்கு ஒன்றிய செயலாளர் ஜெயகுமார், ஒன்றிய கவுன்சிலர் நதியா மனோகரன், நென்மேனி கிராம நிர்வாக அலுவலர் சதீஷ், ஊராட்சி மன்றத்தலைவர் பரமேஸ்வரி ராமகிருஷ்ணன், ஒன்றிய தகவல் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் மற்றும் கிளை செயலாளர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் கொண்டனர்.

The post ரேஷன் கடைக்கு புதிய கட்டிடம் எம்எல்ஏ துவக்கி வைத்தார் appeared first on Dinakaran.

Tags : MLA ,Paramakudi ,Karunkulam ,Nenmeni ,Dinakaran ,
× RELATED டிடிவி, ஓபிஎஸ் டெபாசிட் வாங்குவதே பெரிய விஷயம்: அதிமுக எம்எல்ஏ பளீர்