×

ரெடிமேட் கடையில் திடீர் தீ விபத்து

 

நாமக்கல், மார்ச் 11: நாமக்கல்லில் உள்ள ரெடிமேட் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில், பல லட்சம் மதிப்பிலான துணிகள் எரிந்து சாம்பலானது.நாமக்கல் -சேலம் ரோட்டில் தனியாருக்கு சொந்தமான கட்டிடத்தின் முதள் தளத்தில் ரெடிமேட் கடை ஒன்று உள்ளது. இந்த கடையில் நேற்று காலை, திடீரென தீ விபத்து ஏற்பட்டது. உடனடியாக அருகில் இருந்தவர்கள் நாமக்கல் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதன் பேரில், விரைந்து வந்த நாமக்கல் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து செயல்பட்டதால், 30 நிமிடங்களுக்குள் தீ கட்டுப்படுத்தப்பட்டு அருகில் உள்ள கட்டிடங்களுக்குள் பரவாமல் தடுக்கப்பட்டது.இந்த தீ விபத்தில், பல லட்சம் ரூபாய் மதிப்பிலான ரெடிமேட் துணிகள் தீயில் எரிந்து சாம்பலானது. மின்கசிவு காரணமாக இந்த தீவிபத்து நடந்ததாக தீயணைப்பு துறையினர் தெரிவித்தனர். இது குறித்து நாமக்கல் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தற்போது கோடை காலம் என்பதாலும், பகலில் வெயில் அதிகரித்து வருவதாலும், பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும், அதே போல் வனப்பகுதி, மற்றும் காய்ந்த மரங்களின் அருகில் பீடி, மற்றும் சிகரெட் போன்றவைகளை வீசக்கூடாது என தீயணைப்பு துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

The post ரெடிமேட் கடையில் திடீர் தீ விபத்து appeared first on Dinakaran.

Tags : Namakkal ,Namakkal-Salem road ,Dinakaran ,
× RELATED பஸ் டிரைவரை கொன்று உடலை ஏரியில்...