×

ரூ.10,000 கோடி நிதி வசூலித்து மோசடி; புலன் விசாரணை தகவல்களை வெளியிட உயர் நீதிமன்றம் தடை

சென்னை: வேலூர் சத்துவாச்சேரியை தலைமை இடமாக கொண்டு இன்டர்நேஷனல் பைனான்ஸ் சர்வீசஸ் நிறுவனம் சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பல பெயர்களில் கிளைகளுடன் இயங்கியது. புகாரின்படி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தியதில் இந்த நிறுவனம்  ரூ.10,000 கோடிவரை முதலீடுகளை வாங்கி மோசடி செய்துள்ளது தெரியவந்தது. இந்நிலையில், கைது செய்யப்பட்ட நிதி நிறுவன ஏஜென்ட் குப்புராஜின் மனைவி பிரீத்தி, தனது கணவர் தொடர்பான செய்திகளை வெளியிட தடை விதிக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.கே.இளந்திரையன், இது மிகப்பெரிய மோசடி. யாரும் ஏமாற வேண்டாம் என்ற விழிப்புணர்வு் இதன் மூலம் தரப்படுகிறது. இது அரசியலமைப்புக்கு முரணானது இல்லை. அதே நேரத்தில். விசாரணை என்பது ரகசியமானது. அதில் வெற்றி பெற்றால்தான் தீர்வு கிடைக்கும். எனவே, விசாரணை அதிகாரிகள் இந்த வழக்கில் புலன் விசாரணையில் கிடைக்கும் தகவல்கள், ஆவணங்கள், ஒப்புதல் வாக்குமூலங்கள் ஆகியவற்றை ஊடகங்களில் வெளியிடக்கூடாது என்று உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்….

The post ரூ.10,000 கோடி நிதி வசூலித்து மோசடி; புலன் விசாரணை தகவல்களை வெளியிட உயர் நீதிமன்றம் தடை appeared first on Dinakaran.

Tags : High Court ,Chennai ,Vellore Satuvacheri ,International Finance Services'Institute ,Kanchipuram ,
× RELATED புழல் சிறையில் விசாரணை கைதிகள்...