×

ரூ.10 கோடி மதிப்பில் கட்டப்பட்ட அறிவியல் பூங்கா கட்டுமான பணி நிறைவு

ஈரோடு: ஈரோட்டில் ரூ.10 கோடி மதிப்பீட்டில் துவங்கப்பட்ட அறிவியல் பூங்கா கட்டுமான பணி நிறைவடைந்தது. ஈரோடு மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி ஈரோடு முத்தம்பாளையம் வீட்டு வசதி வாரியம் சூரம்பட்டி அணைக்கட்டு பகுதியில் அறிவியல் தொழில்நுட்ப பூங்கா அமைக்க ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இந்த பூங்காவில், மாணவ-மாணவிகள் அறிவியல் தொழில்நுட்பங்களை அறிந்து கொள்ளும் வகையில் கட்டுமான பணிகள் தீவிரமாக நடந்து வந்தது. மேலும், மாணவ-மாணவிகளை கவரும் வகையில் யானை, டைனோசர் போன்ற விலங்குகளின் உருவ சிலைகளும், மாதிரி ராக்கெட் ஏவுதளமும், அதில் ராக்கெட்டுகள் புறப்படுவதற்கு தயாராக உள்ளதைபோல அமைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி உலக உருண்டை, டி.என்.ஏ., ஆர்.என்.ஏ. மாதிரி வடிவங்கள்,விசைகளை அறிந்து கொள்ளும் கருவிகள்,இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவின் மாதிரி ராக்கெட்டுகள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. இந்த பூங்காவின் அனைத்து கட்டுமான பணிகளும் நிறைவடைந்துள்ளது. விரைவில் திறப்பு விழா செய்யப்பட உள்ளது. இந்த பூங்கா திறக்கப்பட்டதும் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு இலவசமாக அனுமதிக்கப்பட உள்ளனர் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்….

The post ரூ.10 கோடி மதிப்பில் கட்டப்பட்ட அறிவியல் பூங்கா கட்டுமான பணி நிறைவு appeared first on Dinakaran.

Tags : Science Park ,Erode ,Smart City ,Erode Corporation ,Science ,Park ,Dinakaran ,
× RELATED அகல் விளக்கு திட்டம், எந்திரனியல்...