×

ரூபாய் மதிப்பு வரலாற்று சரிவு

மும்பை: சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு, அமெரிக்க டாலருக்கான தேவை அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் உலகின் முக்கிய பல நாடுகளின் கரன்சிகள் வரலாறு காணாத வீழ்ச்சியை சந்தித்து வருகின்றனர். கடந்த ஓராண்டில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 10 சதவீதம் அளவுக்கு சரிந்தது. கடந்த மாதம் 21ம்  தேதி வரலாற்றில் இல்லாத அளவுக்கு முதல் முறையாக ரூபாய் மதிப்பு 80 ஐ தொட்டது. நேற்று காலை வர்த்தகம் தொடங்கிய போது 82.40 ஆக இருந்த இந்திய ரூபாயின் மதிப்பு, வர்த்தக முடிவில் 61 காசுகள் சரிந்து, இதுவரை இல்லாத புதிய உச்சமாக ரூ.83.01 ஆக இருந்தது. டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 83ஐ தாண்டுவது இதுவே முதல் முறை. இந்திய ரூபாய் மதிப்பை வலுப்படுத்த ரிசர்வ் வங்கி பல்வேறு நடவடிக்கை எடுத்தும், சர்வதேச சந்தையில் பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் காரணமாக ரூபாய் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருகிறது. சர்வதேச சந்தையில் பிரண்ட் கச்சா எண்ணெய் விலை 0.82 சதவீதம் அதிகரித்து பேரல் ஒன்றுக்கு 90.77 டாலராக அதிகரித்துள்ளது….

The post ரூபாய் மதிப்பு வரலாற்று சரிவு appeared first on Dinakaran.

Tags : Mumbai ,Dinakaran ,
× RELATED வாடிக்கையாளர்களின் தரவுகள் திருட்டா?: ஏர்டெல் நிறுவனம் மறுப்பு