×

ராம்தேவ் சர்ச்சை பேச்சு ஆதாரங்கள் தாக்கல்

புதுடெல்லி: கொரோனா நோய் தொற்றை தனது கொரோநில் மருந்து குணப்படுத்தும் என்றும், அலோபதி மருத்துவ முறை முட்டாள்தனமானது என பாபா ராம்தேவ் பேசியதற்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. இதுதொடர்பாக பல்வேறு மாநில நீதிமன்றங்களில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்குகள் அனைத்தையும் டெல்லி உயர்நீதிமன்றத்திற்கு மாற்ற பாபா ராம்தேவ் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.வழக்கை விசாரித்த நீதிமன்றம், சர்ச்சை பேச்சு குறித்த அனைத்து வீடியோ ஆதாரங்களையும் தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தது. இதன்படி, தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வில் நேற்று வீடியோ ஆதாரங்கள் தாக்கல் செய்யப்பட்டன. வழக்கு விசாரணை அடுத்த வாரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது….

The post ராம்தேவ் சர்ச்சை பேச்சு ஆதாரங்கள் தாக்கல் appeared first on Dinakaran.

Tags : Ramdev ,New Delhi ,
× RELATED சர்வதேச யோகா தினம் பதஞ்சலி கொண்டாட்டம்