ராமநாதபுரம், மே 20: ராமநாதபுரம் மாவட்டத்தில் 10ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் 32 அரசு பள்ளிகள் உட்பட 79 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளனர். மாவட்ட அளவில் 93.86% தேர்ச்சி பெற்று மாநில அளவில் 12 வது இடம் பிடித்துள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் 10வகுப்பு அரசு பொதுத்தேர்வில் 8,011 மாணவர்கள், 8,287 மாணவிகள் என மொத்தம் 16,298 பேர் தேர்வு எழுதினர். நேற்று வெளியான தேர்வு முடிவுகளின் படி 7,292 மாணவர்கள் 8,005 மாணவிகள் என மொத்தம் 15,297 பேர் தேர்ச்சி பெற்று மாவட்ட அளவில் மொத்தம் 93.86 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
மாவட்டத்தில் உள்ள 137 அரசு பள்ளிகளில் 32 பள்ளி மாணவ மாணவியர்கள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றனர். இதனை போன்று 49 அரசு உதவி பெறும் பள்ளிகளில் 7 பள்ளிகள், 75 மெட்ரிக் பள்ளிகளில் 40 பள்ளி மாணவ. மாணவியர்கள் 100 % தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி விகிதம் குறைந்த பள்ளிகளின் தலைமையாசிரியர்களிடம் நேரடி விசாரணை செய்து, முழு அறிக்கை கேட்கப்பட்டதாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலுமுத்து தெரிவித்தார்.
The post ராமநாதபுரத்தில் 32 அரசுப் பள்ளிகள் உட்பட 79 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி appeared first on Dinakaran.