×

ராமக்காள் ஏரிக்கு நீர்வரத்து அதிகரிப்பு

தர்மபுரி, செப்.4: தர்மபுரி- நகர எல்லையான கிருஷ்ணகிரி சாலையில், ராமக்காள் ஏரி உள்ளது. பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில், 265 ஏக்கர் பரப்பளவில் இந்த ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரிக்கு சின்னாற்றில் இருந்து கால்வாய் மூலம் தண்ணீர் கொண்டு வரப்படுகிறது. இங்கிருந்து வெளியேறும் உபரிநீர், சனத்குமார நதியில் கலந்து, கம்பைநல்லூர் அருகே தென்பெண்ணை ஆற்றில் கலக்கிறது. இந்த ஏரி முழுமையாக நிரம்பும்போது கடல்போல் காட்சியளிக்கும். சில ஆண்டுகளுக்கு பிறகு, கடந்த ஆண்டு தான் சின்னாற்றின் உபரிநீர் ராமக்காள் ஏரிக்கு தண்ணீர் வந்து, ஏரி முழுமையாக நிரம்பியது.

இதை பயன்படுத்தி விவசாயிகள் நெல் சாகுபடி செய்து, அறுவடையும் செய்து விட்டனர். தற்போது, மீண்டும் நெல் சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், கடந்த ஒருமாதமாக வாட்டி வதைத்த கடும் வெயிலால், ஏரியில் தண்ணீர் இருப்பு குறைந்தது. இதனால், நெல் சாகுபடி செய்த விவசாயிகள், அச்சத்தில் இருந்தனர். இதனிடையே, கடந்த சில நாட்களாக இரவு நேரத்தில் பரவலாக பெய்து வருகிறது. இதனால் ராமக்காள் ஏரிக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து, நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஏரியின் தண்ணீரை நம்பி நெல் சாகுபடி செய்து விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

The post ராமக்காள் ஏரிக்கு நீர்வரத்து அதிகரிப்பு appeared first on Dinakaran.

Tags : Ramakal lake ,Dharmapuri ,Dharmapuri-Krishnagiri road ,Public Works Department ,Dinakaran ,
× RELATED செல்போன் திருடிய வாலிபர் கைது