×

ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு 7 ஆயிரம் டோஸ் தடுப்பூசிகள் வந்தது-சுகாதாரத்துறை அதிகாரிகள் தகவல்

ராணிப்பேட்டை : ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு கோவாக்சின், கோவிஷீல்ட் ஆகியவை என மொத்தம் 7 ஆயிரம் தடுப்பூசி குப்பிகள் வந்துள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்கும் விதமாக தமிழக அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் விதமாக வரும் 7ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை தமிழக அரசு அமல்படுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் தொற்று பாதிப்புகளை தடுக்கும் வகையில் தடுப்பூசி போடும் பணிகள் விரைவு படுத்தப்பட்டுள்ளது.அதன்படி, ராணிப்பேட்டை மாவட்டத்தில் கலெக்டர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் தலைமையில் கொரோனா தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மத்திய, மாநில அரசுகளின் வழிகாட்டுதலின்படி 18 வயது முதல் 44 வயதுக்கு உட்பட்டவர்கள், 45 முதல் 60 வயதுக்கு உட்பட்டவர்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது.இதற்கென ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களில் தனி முகாம்கள் அமைக்கப்பட்டு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதுவரை ராணிப்பேட்டை மாவட்டத்தில் 89 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.இந்நிலையில், ஏற்கனவே வழங்கப்பட்ட தடுப்பூசிகள் காலியாகும் நிலையை அடைந்தது. இதனிடையே தமிழக சுகாதாரத்துறையில் இருந்து நேற்று ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு 7 ஆயிரம் கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசிகள் வந்தது. இந்த தடுப்பூசிகள் 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு மட்டும் செலுத்தப்பட உள்ளது.இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘ராணிப்பேட்டை மாவட்டத்தில் தற்போது கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பொதுமக்கள் வசதிக்கென அரசு மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து கொரோனா தடுப்பூசி போடும் முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. ஏராளமான பொதுமக்கள் ஆர்வத்துடன் தடுப்பூசி செலுத்தி கொள்கின்றனர். குறிப்பாக 18 முதல் 44 வயதுக்கு உட்பட்டவர்கள் அதிக எண்ணிக்கையில் தடுப்பூசி போட்டுச் செல்கின்றனர். ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு  6 ஆயிரம் கோவிஷீல்டு மற்றும் 1000 கோவேக்சின் தடுப்பூசிகள் நேற்று(நேற்று முன்தினம்) வந்து சேர்ந்தது. இந்த தடுப்பூசிகள் 45 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு மட்டும் செலுத்த அரசு உத்தரவிட்டுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் மேலும் விரைவு படுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது, என்றனர்….

The post ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு 7 ஆயிரம் டோஸ் தடுப்பூசிகள் வந்தது-சுகாதாரத்துறை அதிகாரிகள் தகவல் appeared first on Dinakaran.

Tags : Ranipet district ,Ranipet ,Covaxin ,Covishield ,
× RELATED ராணிப்பேட்டை மாவட்டத்தில் 2வது நாளாக...