திருச்செங்கோடு, செப்.5: மாநில அளவில் ஆளுநரால் வழங்கப்படும் உயரிய விருதான ராஜ்யபுரஸ்கார் விருதுத்தேர்வு முகாமில் பங்கேற்கவுள்ள சாரண -சாரணீயர்களுக்கான ஆயத்த பயிற்சி முகாம், திருச்செங்கோட்டில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் மூன்று நாட்கள் நடைபெற்றது. முகாம் துவக்க நிகழ்ச்சிக்கு, கேஎஸ்ஆர் கல்வி நிறுவனங்களின் தலைவரும், சாரண இயக்க மாவட்ட துணைத்தலைவருமான சீனிவாசன் தலைமை வகித்தார். செயலர் விஜய் வரவேற்றார்.
கல்வி நிறுவன முதல்வர்கள் குழந்தைவேலு, வெங்கடேசன் முன்னிலை வகித்தனர். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் முதன்மை ஆணையர் மகேஸ்வரி ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு முகாமை துவக்கி வைத்தனர். ராஜகோபால் மற்றும் கிருஷ்ணன், விஜயகுமார், திலகவதி, கவிதா, ஜெயந்தி ஆகியோர் அடங்கிய குழு வழிநடத்தினர். முகாமில் அணிமுறை, முதலுதவி, ஆக்கல் கலை, நிலப்படம், மதிப்பீடு உள்ளிட்ட பிரிவுகளில் பயிற்சி அளிக்கப்பட்டது. பேராசிரியர் தேவபாரதி தலைமையிலான மாணவ -மாணவியர்கள் சாரண இயக்க மாணவர்களுக்காக இன்னிசை விருந்தளித்தனர்.
நிறைவு விழாவில், மாவட்ட கல்வி அலுவலர்கள் ரவிச்சந்திரன்(இடைநிலை), பாலசுப்ரமணியம் (தொடக்கக்கல்வி), கணேசன்(தனியார் பள்ளிகள்) ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு பேசினர். மாவட்டத்தலைவர் குணசேகரன், ஆணையர்கள் சிங்காரவேல், தில்லைக்குமார், சித்ராமோகன், வெற்றிச்செல்வன், சாரதாமணி, பயிற்சித்திடல் செயலாக்கக் குழுமச் செயலர் சிதம்பரம், குமார், சண்முகசுந்தரம், பழனியப்பன், ரகோத்தமன், இணை செயலர் தேன்மொழி ஆகியோர் வாழ்த்தி பேசினர். மாவட்ட அமைப்பு ஆணையர் சடையம்மாள் நன்றி கூறினார்.
The post ராஜ்யபுரஸ்கார் விருது தேர்வுக்கு ஆயத்த பயிற்சி appeared first on Dinakaran.