×

ராஜீவ் உருவப்படத்திற்கு மரியாதை

 

தஞ்சாவூர், மே 22: முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ் காந்தியின் 32வது நினைவு தினத்தை முன்னிட்டு தஞ்சை தெற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் தஞ்சாவூர் ரயிலடி முன்பு ராஜீவ் காந்தியின் உருவபடத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.நிகழ்ச்சிக்கு தஞ்சை தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி வாண்டையார் தலைமை வகித்தார். நிகழ்ச்சிக்கு மாவட்ட துணைத்தலைவர் அன்பரசன், மாவட்ட பொதுசெயலாளர் மோகன்ராஜ், மாநகர மாவட்ட துணைத்தலைவர் செந்தில் பழனிவேல், பொதுக்குழு உறுப்பினர்கள் கண்டிதம்பட்டு கோவிந்தராஜு, கதர் வெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில் மாவட்ட ஊடகபிரிவு தலைவர் பிரபு, வட்டார தலைவர் ரவிச்சந்திரன், சோழ மண்டல சிவாஜி பாசறை தலைவர் சதா வெங்கட்ராமன், ஆண்டவர், வடக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் செயலாளர் ரமேஷ் சிங்கம், கோவிந்தராஜ், சுவீதா ஞானபிரகாசம், சரவணன், திருஞானம், ஜாபர் உசேன், உத்திராபதி, கருணாநிதி, பாஸ்கி. பொன். நல்லதம்பி, ரெங்கசாமி, மூக்கையா, அருண் சுபாஷ், முருகாணந்தம், வரகூர் மீசை முருகன் உத்தமுண்டார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

The post ராஜீவ் உருவப்படத்திற்கு மரியாதை appeared first on Dinakaran.

Tags : Rajiv ,Thanjavur ,Rajiv Gandhi ,Dinakaran ,
× RELATED 15 மாதங்களில் 11 கல்லீரல் மாற்று அறுவை...