×

ரயில் பயணிகளிடம் கொள்ளையடிக்கப்பட்ட 1 கோடியே 30 லட்சம் ரூபாய் மதிப்பு பொருட்கள் உரியவரிடம் ஒப்படைப்பு

பெரம்பூர்: ரயில் பயணிகளிடம் இருந்து திருடப்பட்ட பொருட்கள் உரியவரிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி சென்னை பெரம்பூர் ரயில்வே திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கடந்த மே மாதம் 1ம் தேதி முதல் செப்டம்பர் மாதம் 30ம் தேதி வரை பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் அடிப்படையில் செயின் பறிப்பு திருட்டு வழக்குகளில் மீட்கப்பட்ட திருச்சி சரகத்தில் 172 சவரன் நகை, சென்னை சரகத்தில் 21 சவரன் என ரூ.96 லட்சம் மதிப்புள்ள 193 சவரன்  தங்க நகைகள் கண்டுபிடிக்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. ரூ.7லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள 156 செல்போன்களும் ரூ.1 லட்சத்து 80 ஆயிரம் மதிப்புள்ள 6 லேப்டாப்கள் மற்றும் ரூ.28 ஆயிரம் பணம் உட்பட ரூ.1 கோடியே 30 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.இந்த நிகழ்ச்சியில், தமிழ்நாடு காவல்துறை இயக்குனர் சைலேந்திரபாபு, ரயில்வே காவல்துறை கூடுதல் இயக்குனர் வனிதா, ரயில்வே காவல்துறை துணை தலைவர் அபிஷேக்திக்‌ஷித், ரயில்வே கண்காணிப்பாளர் உமா, அதிவீரபாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர். சிறப்பாக செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்து பயணிகளின் உடைமைகளை மீட்க உதவியாக இருந்த போலீசாரை பாராட்டி சான்றிதழ் மற்றும் வெகுமதிகள் வழங்கப்பட்டன. கடந்த மே 1ம் தேதி முதல் செப்டம்பர் 30ம் தேதி வரை நடத்தப்பட்ட கஞ்சா வேட்டையில் ரயில்வே போலீசார் சார்பில் 105 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 739 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு 61 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு உள்ளனர். அவர்களில் 5 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. ரயில்வே போலீசார் சார்பில், இதுவரை 14115 கிலோ ரேசன் அரிசி 1588, 144 கிலோ புகையிலை பொருட்கள், 690 லிட்டர் மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ரயில் நிலையங்களில் சுற்றித்திரிந்த 1060 சிறார்கள் மீட்கப்பட்டு 39 பேர் பெற்றோரிடமும் 1021 சிறுவர்கள் காப்பகத்திலும் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். பொதுமக்களிடம் விழிப்புணர்வை கொண்டு செல்லும் நோக்கில் 33100 விழிப்புணர்வு பிரசாரங்கள் ரயில் நிலையங்கள் மற்றும் தண்டவாள பகுதிகள் மற்றும் பள்ளி கல்லூரிகளில் பொதுமக்களுக்காக நடத்தப்பட்டுள்ளது. இதன்பிறகு நிருபர்களிடம் டிஜிபி சைலேந்திரபாபு கூறியதாவது; போதைப் பொருட்களை முற்றிலுமாக ஒழிப்பதற்கு காவல்துறையினர் செயல்பட்டு வருகின்றனர்.தமிழக எல்லைகளான ஆந்திரா, கர்நாடகா பகுதியில் தீவிரமாக வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 3  மாதத்தில் 1700 கிலோ கஞ்சாவை ரயில் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். மோப்ப நாய்கள் உதவியுடன் கஞ்சா வேட்டை நடந்து கொண்டிருக்கிறது. போதை பொருட்கள் முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் என்பதுதான் அரசாங்கத்தின் நிலைப்பாடு. போதை பொருட்கள் வழக்கில் குற்றவாளிகளை  கைது செய்வது மட்டுமல்லாமல் இப்போது முதல் முறையாக அவர்களின் வங்கி கணக்கு, சொத்துக்களை முடக்கும் பணிகளை  செய்து வருகிறோம். கஞ்சா போதை பொருட்கள் வியாபாரம் செய்யக்கூடிய நபர்கள், பல மாதங்களாக பிணையில் உள்ளவர்களை மின்னல் ரவுடி  வேட்டையில் பிடித்து வருகிறோம்….

The post ரயில் பயணிகளிடம் கொள்ளையடிக்கப்பட்ட 1 கோடியே 30 லட்சம் ரூபாய் மதிப்பு பொருட்கள் உரியவரிடம் ஒப்படைப்பு appeared first on Dinakaran.

Tags : Perambur ,Chennai Perambur Railway Wedding Hall ,Dinakaran ,
× RELATED இன்ஸ்டாகிராமில் துப்பாக்கி, கத்தியை காட்டி ரீல்ஸ் வெளியிட்டவர் கைது