×

ரஃபேல் போர் விமானங்கள் வாங்குவதற்கான ஒப்பந்தம் தொடர்பாக புதிய விசாரணை நடத்த உச்சநீதிமன்றம் மறுப்பு

டெல்லி: இந்தியா மற்றும் பிரான்ஸ் இடையே 36 ரஃபேல் போர் விமானங்கள் வாங்குவதற்கான ஒப்பந்தம் தொடர்பாக புதிய விசாரணை நடத்த கோரிய பொதுநல மனுவை ஏற்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது. உண்மைகள் மற்றும் சூழ்நிலைகளின் மூலம், எந்த வழக்கையும் அதிகார வரம்பைப் பயன்படுத்த முடியாது என தலைமை நீதிபதி யு.யு. லலித் மற்றும் நீதிபதி எஸ்.ரவீந்திர பட் ஆகியோர் அடங்கிய அமர்வு தெரிவித்துள்ளது. 2016 இந்திய-பிரான்ஸ் ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பாக விமான உற்பத்தியாளர் டசால்ட் ஏவியேஷன் இந்திய நிறுவனத்திற்கு 1 மில்லியன் யூரோ செலுத்தியதாகக் கூறப்படும் பிரான்ஸ் விசாரணை நிறுவனமான ஏஜென்ஸ் ஃபிரான்சைஸ் ஆண்டிகரப்ஷன் (ஏஎஃப்ஏ) விடம் இருந்து ஆவணங்களைத் திரும்பப் பெறுமாறு உச்சநீதிமன்ற  வழக்கறிஞர் எம்.எல்.ஷர்மா தாக்கல் செய்த மனுவில் கோரியிருந்தார். இந்த மனுவில் பிரதமர் நரேந்திர மோடியை முதல் எதிர்மனுதாரராகவும், அதைத் தொடர்ந்து சுஷேன் மோகன் குப்தா, டெஃப்சிஸ் சொல்யூஷன்ஸ் பிரைவேட் லிமிடெட், டசால்ட் ரிலையன்ஸ் ஏரோஸ்பேஸ் லிமிடெட், மத்திய அரசு மற்றும் மத்திய புலனாய்வுப் பிரிவு ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.  இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ரஃபேல் போர் விமானங்கள் வாங்குவதற்கான ஒப்பந்தம் தொடர்பாக புதிய விசாரணை நடத்த மறுத்துவிட்டனர். …

The post ரஃபேல் போர் விமானங்கள் வாங்குவதற்கான ஒப்பந்தம் தொடர்பாக புதிய விசாரணை நடத்த உச்சநீதிமன்றம் மறுப்பு appeared first on Dinakaran.

Tags : Supreme Court ,Delhi ,India ,France ,Dinakaran ,
× RELATED எதிர்கட்சிகளின் அழுத்தம், சுப்ரீம்...