×

மொத்தம் 8.85 லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர் பிளஸ் 1 தேர்வு இன்று தொடக்கம்

சென்னை: தமிழகத்தில் 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2  வகுப்புகளுக்கான தேர்வுகள் தொடங்கியுள்ள நிலையில் இன்று பிளஸ் 1 தேர்வு தொடங்குகிறது. மொத்தம் 8 லட்சத்து 85 ஆயிரத்து 53 மாணவ, மாணவியர் தேர்வு எழுதுகின்றனர். தமிழகத்தில் இயங்கும் பள்ளிகளில் இருந்து 8 லட்சத்து 69 ஆயிரம் மாணவ, மாணவியர் பதிவு செய்துள்ளனர். அவர்களில் 4 லட்சத்து 26 ஆயிரத்து 917 பேர் மாணவர்கள். 4 லட்சத்து 42 ஆயிரத்து 989 பேர் மாணவியர். மூன்றாம் பாலினத்தவர்கள் 2 பேரும் தேர்வு எழுத பதிவு செய்துள்ளனர். புதுச்சேரியில் இயங்கும் பள்ளிகளில் இருந்து 15ஆயிரத்து 145 மாணவ, மாணவியர் பதிவு செய்துள்ளனர். இவர்கள் தவிர பிளஸ் 1 தேர்வை தனித் தேர்வர்களாக  எழுத 5 ஆயிரத்து 673 மாணவ, மாணவியர் பதிவு செய்துள்ளனர். மாற்றுத்திறனாளிகள் 5 ஆயிரத்து 299 பேர் பதிவு செய்துள்ளனர். சிறைவாசிகள் 99 பேரும் பதிவு செய்துள்ளனர்.முதல் நாளான இன்று மொழிப்பாடத் தேர்வு நடக்கிறது. காலை 10 மணிக்கு தேர்வு தொடங்க உள்ளது. தேர்வு தொடங்கும்போது வழக்கம்போல 15 நிமிடங்கள் விடைத்தாள் குறிப்பு எழுதவும், கேள்வித்தாள் படித்துப் பார்க்கவும் ஒதுக்கப்படுகிறது. 10.15 மணிக்கு விடை எழுத தொடங்க வேண்டும். மதியம் 1.15 மணிக்கு தேர்வு முடிகிறது. இதையடுத்து 12ம் தேதி ஆங்கில பாடத் தேர்வு நடக்கிறது.  பள்ளி மாணவர்களுக்காக 3119 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தனித் தேர்வர்களுக்காக 115 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதுதவிர சிறைத் தேர்வு மையங்கள் 9 அமைக்கப்பட்டுள்ளன. பிளஸ் 1 தேர்வு அறை கண்காணிப்பு பணியில் 47315 ஆசிரியர்களும், 3050 பறக்கும் படையினரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.* பிளஸ் 2 தேர்வில் ‘பிட்’: 3 பேர் சிக்கினர்பிளஸ் 2 தேர்வு கடந்த 5ம் தேதி தொடங்கியது. முதல் நாள் தேர்வில் தமிழ்ப்பாட தேர்வு நடந்தது. முதல் நாளே 37 ஆயிரம் மாணவ, மாணவியர் தேர்வு எழுத வரவில்லை. இந்நிலையில், நேற்று ஆங்கிலப்பாடத் தேர்வு நடந்தது. இந்த தேர்வில் பிட் அடித்ததாக நாமக்கல் மாவட்டத்தில் 1, புதுக்கோட்டை 1, காஞ்சிபுரம் 1 என 3 மாணவர்கள் பறக்கும் படையிடம் சிக்கியுள்ளனர்….

The post மொத்தம் 8.85 லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர் பிளஸ் 1 தேர்வு இன்று தொடக்கம் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED பெண்களின் பாதுகாப்புக்கு நடவடிக்கை...