×

மேற்கு வங்கத்தில் மம்தா… கேரளாவில் பினராயி விஜயன் ஆட்சி அமையும் என கருத்துக் கணிப்பில் தகவல்; அசாமில் பாஜக வெல்லும் எனவும் கணிப்பு!!

சென்னை : தமிழகம், கேரளா, மேற்கு வங்கம், அசாம், புதுச்சேரி ஆகிய  5 மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அது தொடர்பாக ABP-சி வோட்டர் செய்தி நிறுவனம் நடத்திய கருத்துக் கணிப்பின் முடிவுகள் வெளியாகி உள்ளன. அதன்படி தமிழகத்தில் திமுக, காங்கிரஸ், இடது சாரிகள் கூட்டணி 43% வாக்குகளை பெற்று 161 முதல் 169 இடங்களை கைப்பற்றி ஆட்சி அமைக்கும் என்று கூறியுள்ளது.*மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் வெற்றி பெற்று மூன்றாவது முறையாக மம்தா பானர்ஜி முதலமைச்சராகப் பொறுப்பேற்பார் என்று கூறப்பட்டுள்ளது.திரிணாமுல் காங்கிரஸ் 150 முதல் 166 இடங்களில் வெல்ல வாய்ப்பு இருப்பதாக ஏபிபி கருத்துக்கணிப்பில் தகவல். அதேநேரம் கடந்த 2016ஆம் ஆண்டு தேர்தலில் வெறும் மூன்று இடங்களில் மட்டுமே வென்ற பாஜக இந்த முறை 98 முதல் 114 இடங்களில் வென்று எதிர்க்கட்சியாக உருவெடுக்கும் எனக் கூறப்பட்டுள்ளது.*கேரளாவில் பினராயி விஜயன் தலைமையிலான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் எனக் கூறப்பட்டுள்ளது. இத்தேர்தலில் இடதுசாரிகள் 77-85 இடங்களில் வெல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் காங்கிரஸ் கூட்டணி 54 முதல் 62 இடங்களில் வெல்லும் எனக் கூறப்பட்டுள்ளது. கேரளாவில் 0 – 2 தொகுதிகளில் மட்டுமே பாஜக வெற்றி பெறும் என ஏபிபி கருத்துக்கணிப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.*அசாம் மாநிலத்தில் பாஜக மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று கருத்துக்கணிப்பு தெரிவித்துள்ளது. அசாம் மாநிலத்தில் பாஜக 64 முதல் 72 இடங்கள் வரை வெல்லும் என்றும் காங்கிரஸ் கூட்டணி 52 – 60 இடங்களில் வெல்லும் என்றும் கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. …

The post மேற்கு வங்கத்தில் மம்தா… கேரளாவில் பினராயி விஜயன் ஆட்சி அமையும் என கருத்துக் கணிப்பில் தகவல்; அசாமில் பாஜக வெல்லும் எனவும் கணிப்பு!! appeared first on Dinakaran.

Tags : Mamata ,West Bengal ,Pinarayi Vijayan ,government ,Kerala ,BJP ,Assam ,Chennai ,Tamil Nadu ,Puducherry ,Pinarayi Vijayan government ,
× RELATED மேற்கு வங்கத்தில் பயணிகள் ரயில் மீது...