×

மேற்குவங்கத்தில் 4 கட்ட தேர்தலில் மம்தா ‘கிளீன்போல்டு’: பிரதமர் மோடி விமர்சனம்

பர்தமான்: இதுவரை நடந்து முடிந்த தேர்தலில் பாஜ சதம் அடித்துவிட்டது, முதல்வர் மம்தா பானர்ஜி கிளீன்போல்டு ஆகிவிட்டார் என பிரதமர் மோடி விமர்சித்துள்ளார். மேற்கு வங்க மாநிலத்தில் இதுவரை நான்கு கட்டமாக சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்துள்ளது. ஐந்தாவது கட்டமாக தேர்தல் நடக்கும் பகுதிகளில் பிரசாரம் தீவிரம் அடைந்துள்ளது. பர்தமான் பகுதியில் நடந்த பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:நடந்து முடிந்த முதல் 4 கட்ட தேர்தலிலும் பாஜ சதம் அடிக்கும் வகையில் மேற்கு வங்க மக்கள் ஏராளமான 4 மற்றும் 6 ரன்களை குவித்துள்ளனர். விளையாட்டின் பாதியிலேயே திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை மக்கள் வெளியேற்றி விட்டனர். மேற்கு வங்கத்தின் மக்கள் நந்திகிராமில் தீதியை (மம்தா) கிளீன்போல்டு ஆக்கிவிட்டதோடு அவரது ஒட்டுமொத்த குழுவையும் களத்தைவிட்டே வெளியேறும்படி கேட்டுக்ெகாண்டுள்ளனர். உங்களது கொள்கையானது எண்ணற்ற தாய்மார்களது குழந்தைகளின் வாழ்க்கையை பறித்துவிட்டது.சகோதரி தன்னை ஒரு வங்கத்து புலி என்று கூறிக்கொள்கிறார். தாழ்த்தப்பட்ட சமூகத்தை பிச்சைகாரர்கள் என்று திரிணாமுல் கட்சியினர் அவமதித்து உள்ளனர். சகோதரியின் அனுமதியின்றி யாராவது இதுபோன்று சொல்வதற்கு சாத்தியமுண்டா? இதுபோன்ற கருத்துக்கள் அம்பேத்ரின் ஆன்மாவை காயப்படுத்தும். தாழ்த்தப்பட்ட சமூகத்தை அவமதித்ததன் மூலமாக நீங்கள் மிகப்பெரிய தவறு, மிகப்பெரிய பாவத்தை செய்துவிட்டீர்கள். மக்களை ஒன்றிணைப்பது மற்றும் சேவை செய்வது தான் எனது நோக்கமாக இருக்கின்றது. ஆட்சியில் இருந்து வெளியேறியபின் காங்கிரஸ் திரும்ப ஆட்சிக்கு வராது, அதிகாரத்தில் இருந்து நீக்கப்பட்ட பின்னர் இடது சாரிகள் திரும்ப வரமுடியாது என்பது சகோதரிக்கு தெரியும். நீங்களும் இருந்த இடத்திற்கு மீண்டும் திரும்ப முடியாது. இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்….

The post மேற்குவங்கத்தில் 4 கட்ட தேர்தலில் மம்தா ‘கிளீன்போல்டு’: பிரதமர் மோடி விமர்சனம் appeared first on Dinakaran.

Tags : Mamata ,phase elections ,West Bengal ,Modi ,Bardaman ,BJP ,Chief Minister ,Mamata Banerjee ,elections ,Dinakaran ,
× RELATED நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய...