×

மெஜந்தா நிற பாக்கெட்டுக்களில் ஆவின் பிரிமியம் பசும்பால் விற்பனை

 

ஊட்டி,ஆக.12: பிரிமியம் பசும்பால் (500 மி.லி) இனி மெஜந்தா நிற பாக்கெட்டுக்களில் விற்பனை செய்யப்படும். நீலகிரி மாவட்ட ஆவின் நிறுவன பொது மேலாளர் ஜெயராமன் கூறியிருப்பதாவது: நீலகிரி மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் மூலம் விற்பனை செய்யப்படும் பிரிமியம் பசும்பால் (500 மி.லிட்டர்) பாக்கெட் இளஞ்சிவப்பு நிறுத்தில் விற்பனை செய்யப்பட்டு வந்தது. தற்போது இதன் நிறம் மாற்றப்பட்டு வரும் 22ம் தேதி வரை மெஜந்தா நிற பாக்கெட்டுக்களில் விற்பனை செய்யப்படும். அப்பாலின் தரத்தில் எவ்வித மாற்றமும் இருக்காது. இவ்வாறு பொதுமேலாளர் ஜெயராமன் கூறியுள்ளார்.

The post மெஜந்தா நிற பாக்கெட்டுக்களில் ஆவின் பிரிமியம் பசும்பால் விற்பனை appeared first on Dinakaran.

Tags : Aavin ,Nilgiri District ,Aavin… ,Dinakaran ,
× RELATED கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரம்