×

மூலக்காட்டனூர் பிரிவு அருகே பயன்படாத நீர்தேக்க தொட்டியை இடித்து அகற்ற வேண்டும்

 

கரூர், மே 5: கரூர்-திருச்சி சாலை மூலக்காட்டனூர் பிரிவு அருகே செயல்படாத நிலையில் உள்ள மேல்நிலை தொட்டியை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுநல ஆர்வலர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.கருர் திருச்சி சாலையில் காந்திகிராமம் பகுதியை தாண்டியதும் வடக்குபாபளையம் பகுதிக்கு முன்னதாக, மூலக்காட்டனூர் பிரிவுச் சாலை செலகிறது. இந்த பகுதிக்கு எதிரே சாலையோரம் பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட மேல்நிலை தொட்டி உள்ளது.

தற்போது, அந்த தொட்டியால் எந்தவித பயனும் இல்லை. ஆனால், சாலையோரம் பாதுகாப்பற்ற நிலையில் தொட்டி வளாகம் உள்ளதோடு, தொட்டியின் பாகங்கள் அனைத்தும் சிதிலமடைந்து மோசமான நிலையில் உளளது. பல ஆண்டுகளாக தொட்டியின்நிலை இதுபோல உள்ளது. எனவே, இதனை அகற்ற வேண்டும் என்ற கோரிக்கையை பொதுநல ஆர்வலர்கள் வைத்துள்ளனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த தொட்டி வளாகத்தை பார்வையிட்டு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என அனைவரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

 

The post மூலக்காட்டனூர் பிரிவு அருகே பயன்படாத நீர்தேக்க தொட்டியை இடித்து அகற்ற வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Moolakattanur section ,Karur ,Moolakattanur ,Karur-Trichy road ,Gandhigramam ,Vadakkupapalayam ,Dinakaran ,
× RELATED மின் மோட்டார் பழுதால் கடம்பவனீஸ்வரர்...