×

மும்பையில் நடைபெறும் ஜி-20 செயற்குழுக் கூட்டம் எதிரொலி: குடிசைப் பகுதிகள், சாக்கடைகள் பதாகைகள் கொண்டு மறைப்பு

மும்பை: ஜி-20 அமைப்பிம் முதல் செயற்குழுக்கூட்டம் நடைபெறுவதையொட்டி மும்பையில் சாலையோரங்களில் உள்ள குடிசைப் பகுதிகள் பேனர்கள், மற்றும் துணியால் மறைக்கப்பட்டிருப்பது சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. ஜி-20 தலைமை பொறுப்பை இந்தியா ஏற்ற பிறகு மும்பையில் அந்த அமைப்பின் செயற்பாட்டுக் குழு கூட்டம் நடைபெறுகிறது. 14-ம் தேதி முதல் நாளை வரை நடக்கும் இக்கூட்டத்தில் ஜி-20 நாடுகளில் இருந்து சர்வதேச குழுக்கள் கலந்து கொள்கின்றன. மூன்று நாள் கூட்டத்து நிறைவு நிகழ்ச்சி பாந்த்ரா குர்லா பகுதியில் உள்ள ஜியோவேர்ல்ட் மையத்தில் நடைபெறுகிறது. ஜி-20 செயற்குழுவில் கலந்து கொள்ள மும்பை வந்திருக்கும் வெளிநாட்டு குழுக்கள் சாண்டாகுருசில் உள்ள நியூகிரான்ட் கையாத் ஹோட்டலில் தங்கியுள்ளனர். இதனையடுத்து மும்பையில் உள்ள முக்கிய சாலைகளை மாநகராட்சி நிர்வாகம் சுத்தப்படுத்தி அழகுப்படுத்தி இருக்கிறது. அதன் ஒரு பகுதியான சாலையோர குடிசைகள் மற்றும் சாக்கடைகளை வெளிநாட்டு குழுக்களின் பார்வையில் இருந்து மறைப்பதற்காக வரவேற்பு பேனர்கள் மற்றும் துணிகளை கொண்டு மூடி மறைத்திருக்கின்றனர். தெருவோரக்கடைகளை மாநகராட்சி அதிகாரிகள் அகற்றி விட்டனர். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கும் அப்பகுதி குடிசைவாழ் மக்கள் இவற்றை பார்க்கும் போது முன்னர் அகமதாபாத்திற்கு  அமெரிக்கா முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் வந்த போது குடிசைகள் சுவர் எழுப்பி மறைக்கப்பட்டது நினைவுக்கு வருவதாக தெரிவித்திருக்கின்றனர்….

The post மும்பையில் நடைபெறும் ஜி-20 செயற்குழுக் கூட்டம் எதிரொலி: குடிசைப் பகுதிகள், சாக்கடைகள் பதாகைகள் கொண்டு மறைப்பு appeared first on Dinakaran.

Tags : G-20 ,Mumbai ,G-20 Organisation ,Dinakaran ,
× RELATED மும்பையில் காணப்பட்ட வித்தியாசமான காட்சி….