×

முத்துப்பேட்டையில் பழமையான செப்டிக்டேங்கில் விழுந்து 2 நாளாக தவித்த பசு மாடு மீட்பு தீயணைப்பு வீரர்கள் அதிரடி நடவடிக்கை

 

முத்துப்பேட்டை, மே 24: முத்துப்பேட்டையில் பழமையான செப்டிக்டேங்கில் விழுந்து 2 நாளாக தவித்த பசு மாட்டை தீயணைப்பு வீரர்கள் அதிரடியாக மீட்டனர்.
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை புதுத்தெரு நூருல் அமீன் என்பவருக்கு சொந்தமான இடத்தில் பயன்பாட்டில் இல்லாத ஒரு பாழடைந்த செப்டிடேங்கில் அப்பகுதியில் சென்ற பசு மாடு ஒன்று விழுந்து 2 நாட்களாக சத்தமிட்டு தவித்து வந்துள்ளது. இதை பார்த்த அப்பகுதியை சேர்ந்த சுல்தான் இபுராஹீம் என்பவர் முத்துப்பேட்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தார்.

இதையடுத்து அங்கு சென்ற தீயனைப்பு நிலைய அலுவலர் (பொறுப்பு) முருகவேல் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் நீண்டநேரம் போராடி பசு மாட்டை மீட்டனர். பின்னர் மீட்கப்பட்ட பசுமாடு உணவு இன்றி சோர்வாக இருந்ததால், அப்பகுதியினர் தண்ணீர் மற்றும் உணவு கொடுத்தனர். மேலும், சோர்வாக இருந்த பசுமாடு வழக்கம்போல் சுறுசுறுப்பாகி அங்கிருந்து சென்றது. இந்நிலையில் உயிருடன் பசு மாட்டை பத்திரமாக மீட்ட தீயணைப்பு வீரர்களுக்கு அப்பகுதி மக்கள் நன்றி கூறினர்.

The post முத்துப்பேட்டையில் பழமையான செப்டிக்டேங்கில் விழுந்து 2 நாளாக தவித்த பசு மாடு மீட்பு தீயணைப்பு வீரர்கள் அதிரடி நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Muthupettai ,
× RELATED முத்துப்பேட்டையில் சேதமடைந்த...