×

மின் கட்டணத்தை குறைக்க அமைச்சர் மு.பெ.சாமிநாதனிடம் விசைத்தறியாளர்கள் வலியுறுத்தல்

பல்லடம்: விசைத்தறி மின் கட்டணத்தை குறைக்க வேண்டும் என்று அமைச்சர் மு.பெ.சாமிநாதனிடம் விசைத்தறியாளர்கள் கோரிக்கை மனு அளித்து வலியுறுத்தினர். சென்னையில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி நிறுவன தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான ஈஸ்வரன், மின்சார வாரிய தலைவர் ராஜேஷ் லக்கானி ஆகியோரை தமிழ்நாடு விசைத்தறியாளர் சங்க கூட்டமைப்பு மாநில செயலாளர் வேலுசாமி, பல்லடம் பாலாஜி, முத்துகுமார், மங்கலம் கோபால், கண்ணம்பாளையம் தலைவர் செல்வகுமார் ஆகியோர் சந்தித்து விசைத்தறிகளுக்கு மின் கட்டண சலுகை மற்றும் குறைக்கப்பட்ட மின் கட்டணம் கடந்த 1.9.2022 ம்தேதி முதல் கணக்கிட்டு அமல்படுத்தப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை மனு அளித்தனர். இது தொடர்பாக கணினியில் ஒரு சில தினங்களில் மாற்றம் செய்யப்பட்டு அறிவிக்கப்படும் என்று அமைச்சர் சாமிநாதன் தெரிவித்ததாக தமிழ்நாடு விசைத்தறியாளர் சங்க கூட்டமைப்பு மாநில செயலாளர் வேலுசாமி தெரிவித்தார்.

The post மின் கட்டணத்தை குறைக்க அமைச்சர் மு.பெ.சாமிநாதனிடம் விசைத்தறியாளர்கள் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Minister ,MU Saminathan ,Palladam ,M. P. Saminathan ,Chennai ,MU ,Saminathan ,Dinakaran ,
× RELATED 3 வாகன ஓட்டுநர்களுக்கு பணி நியமன ஆணை: அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வழங்கினார்