×

மின்சாரம் பாய்ந்து அஞ்சல் ஊழியர்கள் 2 பேர் படுகாயம்

 

பல்லாவரம், ஜூன் 25: சென்னை ஆண்டாங்குப்பம், பெருமாள் கோயில் தெருவை சேர்ந்தவர் கிரிஷ்குமார் (26) மற்றும் பாலமுருகன். எழும்பூர் அஞ்சல் அலுவலகத்தில் ஊழியர்களாக பணிபுரிந்து வரும் இவர்கள், நேற்று முன்தினம் எழும்பூர் அலுவலகத்தில் இருந்து பார்சல் வாகனத்தில் பம்மல், நாகல்கேணி கண்ணாயிரம் தெருவில் இயங்கும் கம்பெனியில் பார்சல் எடுப்பதற்காக சென்றுள்ளனர்.

அங்கு, வாகனத்தின் கதவை கிரிஷ்குமார் திறந்தபோது, அருகில் இருந்த மின்சார பெட்டி உரசியதால் மின்சாரம் பாய்ந்து கிரிஷ்குமார், அவருடன் இருந்த மற்றொரு ஊழியர் பாலமுருகன் ஆகியோர் தூக்கி வீசப்பட்டனர். படுகாயமடைந்த அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு, குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு, அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து, பம்மல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post மின்சாரம் பாய்ந்து அஞ்சல் ஊழியர்கள் 2 பேர் படுகாயம் appeared first on Dinakaran.

Tags : Pallavaram ,Krishkumar ,Balamurugan ,Antangupam, Perumal Temple Street, Chennai ,Rampur Post Office ,Mundinam Rampur ,Bammal, Nagalkeni ,
× RELATED கனமழை காரணமாக சேதமடைந்த சாலைகளை சீரமைக்க ரூ.13.35 கோடி ஒதுக்கீடு