×

மாஸ்க் போடாத பயணிகளை விமானத்தில் பறக்க விடாதே: விமான நிறுவனங்களுக்கு உத்தரவு

புதுடெல்லி: விமானத்தில் முகக்கவசம் அணிய மறுக்கும் பயணிகளை இறக்கி விடும்படி, அனைத்து விமான நிறுவனங்களுக்கும் விமான போக்குவரத்து இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது.சிறிது காலம் குறைந்திருந்த கொரோனா தொற்று எண்ணிக்கை, கடந்த சில நாட்களாக மீண்டும் உயர்ந்து வருகிறது. ஆனால், கொரோனா கட்டுப்பாடுகள் அனைத்தையும் மக்கள் காற்றில் பறக்க விட்டு விட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சமீபத்தில், இது தொடர்பான வழக்கில் தீர்ப்பு அளித்த டெல்லி உயர் நீதிமன்றம், ‘முகக்கவசம் அணியாத பயணிகளை விமானத்தில் இருந்து இறக்கி விட வேண்டும்,’ என்று தெரிவித்தது. இந்நிலையில், அனைத்து விமான நிறுவனங்களுக்கும் விமான போக்குவரத்து இயக்குநரகம் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், விமானத்தில் முகக்கவசம் அணிய மறுக்கும் பயணிகளுக்கு முதலில் எச்சரிக்கை விடுக்க வேண்டும். அப்படியும் முகக்கவசம் அணியாவிட்டால், விமானம் புறப்படும் முன்பாக அவர்களை கீழே இறக்கி விட வேண்டும். இதற்கு உள்ளூர் போலீசார், பாதுகாப்பு படைகளின் உதவியை நாடலாம். மேலும், சம்பந்தப்பட்ட பயணிகளுக்கு அபராதமும் விதிக்க வேண்டும்,’ என்று கூறப்பட்டு உள்ளது….

The post மாஸ்க் போடாத பயணிகளை விமானத்தில் பறக்க விடாதே: விமான நிறுவனங்களுக்கு உத்தரவு appeared first on Dinakaran.

Tags : New Delhi ,Directorate of Civil Aviation ,
× RELATED நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக...