- மாவட்டம்
- திமுக
- வஜப்பாடி
- முதல் அமைச்சர்
- மு.கே ஸ்டாலின்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- கிழக்கு மாவட்ட
- வாச்பாடி, சேலம் மாவட்டம்
- மாவட்டம் தி.மு.க.
- தின மலர்
வாழப்பாடி, ஜூலை 2: தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்டங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும் கட்சியில் பொறுப்பு வழங்கியுள்ளார். உள்ளாட்சியில் பதவி வழங்கியுள்ளார். இதற்கு வரவேற்பு தெரிவித்து சேலம் மாவட்டம் வாழப்பாடியில் உள்ள கிழக்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற நலச்சங்க டிசம்பர் 3 இயக்கம் சார்பில் மாவட்ட செயலாளர் சிவலிங்கம் எம்.பி.க்கு மாலை, சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். அப்போது, மாவட்ட துணை செயலாளர் சின்னதுரை, மாவட்ட நெசவாளரணி அமைப்பாளர் ஆறுமுகம், ஒன்றிய செயலாளர்கள் மணி, அழகுவேல், பாலமுருகன், சித்தார்த்தன், பேரூராட்சி தலைவர் ராஜா, பேரூர் செயலாளர் பாலமுருகன், பணிக்குழு ஒருங்கிணைப்பாளர் அகிலன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
The post மாவட்ட திமுக செயலாளருக்கு மாற்றுத்திறனாளிகள் பாராட்டு appeared first on Dinakaran.
