×

மாவட்ட திட்டமிடும் குழு உறுப்பினர் முதல் கூட்டம்

தேனி: தேனி மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஊராட்சி மற்றும் நகராட்சி, பேரூராட்சி கவுன்சிலர்களை உள்ளடக்கிய மாவட்ட திட்டமிடும் குழுவிற்கு 12 உறுப்பினர்கள் தேவை. இதில் மாவட்ட ஊராட்சியில் இருந்து 5 உறுப்பினர்களும், நகராட்சி, பேரூராட்சிகளில் இருந்து 7 உறுப்பினர்களுமாக மொத்தம் 12 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். இதன்படி தேனி மாவட்ட திட்டமிடும் குழுவிற்கு 12 உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இதனையடுத்து, தற்போது தேனி மாவட்ட திட்டமிடும் குழு உறுப்பினர்களாக 9 திமுக உறுப்பினர்கள், 1 காங்கிரஸ், 1 பாஜக, 1 ஓபிஎஸ் ஆதரவாளர் என மொத்தம் 12 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். இதன் தலைவராக மாவட்ட ஊராட்சித் தலைவர் செயல்படுகிறார்.

தேனி மாவட்ட ஊரக வளர்ச்சி திட்ட முகமை அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நேற்று காலை திட்டமிடும் குழு உறுப்பினர்களுக்கான முதல் கூட்டம் திட்டமிடும் குழுத் தலைவர் பிரித்தாநடேஷ் தலை மையில் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மதுமதி முன்னிலை வகித்தார். முதல் கூட்டத்தில் புதிய உறுப்பினர்களான நாராயணபாண்டியன், தங்கராஜ், தினகரன் , பவானி, ஜெயந்தி, ராஜீவ், பாண்டியன், தமயந்தி,வளர்மதி, நயினார்முகமது, ராஜபாண்டியன் ஆகியோரை அறிமுகம் செய்யும் நிகழ்வும், மாவட்ட திட்டக்குழு பணிகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில், வீரபாண்டி பேரூராட்சி மன்றத் தலைவர் கீதாசசி, பூதிப்புரம் பேரூராட்சி மன்றத் தலைவர் கவியரசு, பெரியகுளம் நகர்மன்றத் தலைவர் சுமிதாசிவக்குமார் உள்ளிட்ட நகராட்சி, பேருராட்சி மன்றத் தலைவர்கள், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

The post மாவட்ட திட்டமிடும் குழு உறுப்பினர் முதல் கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Theni ,planning ,Dinakaran ,
× RELATED விபத்துகளை தடுக்கும் வகையில் தேனி...